search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 killed"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் 6 பேர் பலியாகினர். #Accident
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தனியார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. டர்ஹல் பகுதியில் சென்றபோது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

    இதில் நிலைகுலைந்த வாகனம் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் போலீசார் அங்கு போக்குவரத்தை சீர்செய்தனர். #Accident 
    பாகிஸ்தானில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். #Pakistan #MilitantsAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பாரா மிலிட்டரி சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பலுசிஸ்தான் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Pakistan #MilitantsAttack
    நேபாளத்தில் இன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சுற்றுலாத்துறை மந்திரி உள்பட 6 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. #NepalHelicopterCrash
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மந்திரி ரபீந்திரா அதிகாரி உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.



    அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரபீந்திரா அதிகாரி உள்பட அதில் பயணம் செய்த 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. #NepalHelicopterCrash
    மகாராஷ்டிரா மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமான உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், நர்மதை ஆற்றில் இன்று சென்ற படகில் சுமார் 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்றபோது படகு நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 39 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கல்யாண்பூர் பகுதியில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #UPBusAccident
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் இருந்து அலகாபாத் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானொர் பயணம் செய்தனர்.

    கல்யாண்பூர் பகுதியில் உள்ள மவ்ஹர் கிராமத்தின் அருகே வந்தபோது, பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைகுலைந்து போன பஸ் எதிரே வந்த சிமெண்ட் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    உ.பி.யில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UPBusAccident
    உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் சாலையோர குடிசைகள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UPAccident
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சந்தவுலி மாவட்டம் வழியாக கால்நடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி மால்டா கிராமத்தின் அருகில் சென்றபோது, தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலைதடுமாறிய லாரி
    சாலையோர குடிசைகள் மீது வேகமாக மோதியது.

    இந்த திடீர் விபத்தில் குடிசையில் இருந்தவர்களில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரு சிறுமி படுகாயம் அடைந்தார்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். #UPAccident
    கர்நாடகாவில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoilerBlastinaSugarMill
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் உள்ள குலாலி கிராமத்தில் முன்னாள் மந்திரி முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
     


    கொதிகலன் வெடித்து சிதறியதில் சர்க்கரை ஆலையின் பல்வேறு சுவர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பலியான சில தினங்களுக்குள் மீண்டும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoilerBlastinaSugarMill
    நேபாளத்தில் பேருந்தும் ஜீப்பும் மோதிய விபத்தில் மணமகனின் பெற்றோர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #NepalAccident
    காத்மண்டு:

    நேபாள நாட்டின் கீதா நகரில் இருந்து ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து இன்று சென்று கொண்டிருந்தது.

    நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள டாங் மாவட்டத்தின் லமாஹி பகுதியில் வரும்போது முன்னாள் சென்ற ஜீப் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். ஜீப் டிட்ரைவர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஜீப்பில் பயணம் செய்தவர்கள் தங்களது மகன் திருமணத்துக்கு சென்று கொண்டிருந்ததும், உயிரிழந்தவர்களில் மாப்பிள்ளையின் தாய், தந்தையும் அடங்குவர் என்பதும் தெரிய வந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NepalAccident
    கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    பெங்களூரு:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கர்நாடகத்துக்கு ஒரு பேருந்து சுற்றுலா வந்தது. அதில் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    ஹூப்ளி அருகே அன்னிகிரி தாலுகா பத்ராபூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலை 63ல் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுற்றுலா சென்ற இடத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident 
    நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியான நிலையில் பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். #Choppercrashes #NepalChoppercrash
    காட்மாண்டு:

    நேபாள நாட்டில் சமாகான் என்ற இடத்தில் இருந்து நேற்று காலை 7.40 மணிக்கு தலைநகர் காட்மாண்டு நோக்கி ஆல்டிடியூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு நோயாளியும், மேலும் 5 பயணிகளும் இருந்தனர். நிஷால் என்ற விமானி ஹெலிகாப்டரை ஓட்டினார்.

    காலை 8 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.



    இந்த ஹெலிகாப்டர் காலை 8.18 மணிக்கு காட்மாண்டு போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் தாடிங், நுவாகாட் மாவட்டங்களையொட்டிய அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இந்த கோர விபத்தில், விமானி நிஷால் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.

    உடனடியாக அங்கு மீட்பு படையினர் ராணுவ ஹெலிகாப்டரிலும், ஒரு தனியார் ஹெலிகாப்டரிலும் விரைந்தனர். லோ அனி டோல்மா என்ற பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலியான 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விசாரணை நடத்தப்படுகிறது.  #Choppercrashes #NepalChoppercrash
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Lightning
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மின்னல் தாக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். #BusAccident
    சேலம்:

    சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 20க்கு மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். #BusAccident
    ×