என் மலர்
செய்திகள்

கர்நாடகா - சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoilerBlastinaSugarMill
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் உள்ள குலாலி கிராமத்தில் முன்னாள் மந்திரி முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கொதிகலன் வெடித்து சிதறியதில் சர்க்கரை ஆலையின் பல்வேறு சுவர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பலியான சில தினங்களுக்குள் மீண்டும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoilerBlastinaSugarMill
Next Story






