என் மலர்

  செய்திகள்

  உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் - மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு
  X

  உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் - மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MaryKom #WorldBoxing #RamnathKovind #PMModi #MamataBanerjee
  புதுடெல்லி:

  உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

  இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் ஆறாவது முறையாக தங்கம் வென்று சாதனை புரிந்ததற்கு பாராட்டுக்கள். இந்த சாதனை மூலம் இந்திய சிறுமிகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக விளங்குகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.  இதேபோல், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். அவர் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். உலக அரங்கில் அவர் ஆற்றியுள்ள சாதனைக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
   
  மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 வது முறையாக பட்டம் வென்ற உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் என பதிவிட்டுள்ளார். #MaryKom #WorldBoxing #RamnathKovind #PMModi #MamataBanerjee
  Next Story
  ×