search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 way road resistance"

    6 வழிசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Publicprotest

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்திமெனிகுப்பம், காக்க வாக்கம், பேரண்டூர், பனபாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடங்கபட்டுள்ளன.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்தி மேனி குப்பம், காக்கவாக்கம், பேரண்டூர், பனபாக்கம், மாம்பாக்கம் உட்பட 10 கிராமங்கள் வழியாக சாலை அமைத்தால் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலபரப்பில் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள் பாதிக்கபடும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாற்று பாதையில் சாலை அமைக்க கோரி 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

    என்றாலும், அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்தும், மாற்று பாதையில் சாலை அமைக்க கோரியும் 10 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் 3 லாரிகளில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். மாற்று பாதையில் சாலையை அமைக்காவிட்டால் தற்கொலை செய்த கொள்வோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பய்யாவிடம் வழங்கினர். தற்கொலை செய்வோம் என்று 10 கிராம பொது மக்கள் கோ‌ஷங்கள் எழுப்பியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. Publicprotest

    ×