என் மலர்
இந்தியா
- மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
- இது ரவிக்குத் தெரியவரவே, இரவில் மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹமீர்பூரைச் சேர்ந்தவர் 35 வயதான ரவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான மனீஷா என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களது காதலுக்கு மனீஷாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
இது ரவிக்குத் தெரியவரவே, நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது, மனீஷாவின் குடும்பத்தினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து, மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவி இறந்ததைக் கண்ட மனீஷாவின் குடும்பத்தினர் அச்சத்தில் மூழ்கினர். கொலை வழக்கு தன் மீது வந்துவிடுமோ என்ற பயத்தில், மனீஷாவின் மாமா பிண்டூ என்பவர் அங்கியேய தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மனீஷாவின் குடும்பத்தினர் உடனடியாக ரவி மற்றும் பிண்டூ ஆகிய இருவரையும் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பிண்டூவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, காதலன் ரவி இறந்த துக்கத்தில் மனீஷாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் மீட்டு அதே சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். தற்போது பிண்டூ மற்றும் மனீஷா ஆகிய இருவரது நிலையும் கவலைக்கிடமாக தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது.
- 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பிரசார களம் பரபரப்பாகி உள்ள நிலையில் நேற்று பீகாரில் சாப்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது. பிகார் மக்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
பஞ்சாபில் இருந்த காங்கிரஸ் முதல்வர் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறினார்.
அந்தச் சமயத்தில், அதே மேடையில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள்(பிரியங்கா காந்தி), அதற்குச் சந்தோஷமாக கைதட்டிக்கொண்டிருந்தார்.
அதேபோல் , கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது.
இவ்வளவு நடந்தும், பீகாரில் ஆர்ஜேடி அமைதியாக வாயடைத்துப் போனது போல் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டனர்.
பீகாரை அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை, இப்போது ஆர்ஜேடி இங்கே பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது" என பேசியுள்ளார்.
முன்னதாக ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பிகார் தேர்தலில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
- பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
- தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
- துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மோன்தா புயலின் பாதிப்பால், ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
இந்தப் புயலால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, மோன்தா புயலால் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு ரூ. 2,079 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.829 கோடியும், மீனவளத் துறைக்கு ரூ.1,270 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் இன்னும் நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால், சேதத்தின் முழுமையான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
எனினும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
- JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த (சிஏஏ) சட்டம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது.
இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தை தூண்டியதாக JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனுக்களை எதிர்த்து டெல்லி காவல்துறை 389 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், 2020 டெல்லி கலவரம் ஆட்சிகவிழ்ப்பை நோக்கமாகக் கொண்டது என்றும், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்றவும் முயற்சி நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கலவரம் ஒரு வகுப்புவாத சதி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த சதித்திட்டத்திற்கு உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மூளையாக செயல்பட்டனர். அவர்கள், உரைகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கூட்டத்தைத் திரட்டினர்.
கலவரம் நடந்த இடத்தில் அவர்கள் இருவரும் இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஆகிவிடாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட ஐந்து பேரின் ஜாமீன் குறித்து நாளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.
- மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
- இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2021-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். "டைம் பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே பாட்டி இவர். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.
பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.
ஆனால், இந்த மனுவை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் கங்கனா ரனாவத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில், கங்கனாவின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை வாபஸ் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்காக கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், "மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து மஹிந்தர் கவுரின் கணவருக்கு நான் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்.இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்த மாநிலத்தைச் சேர்ந்த தாதாவாக இருந்தாலும் எனக்கு மரியாதைக்குரியவர். மேலும் எந்த நபருக்கும் எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான உடனேயே, மஹிந்தர் கவுரின் கணவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்" என்றார்.
- வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றியுள்ளார்.
- யூடியூபர் ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்டூடியோவில் குழந்தைகளை பணயமாக பிடித்து வைத்து மிரட்டியவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆக்டிங் ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தவரும் யூடியூபருமான ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.
வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி அழைத்து வந்து பயணக்கைதிகளாக வைத்து மிரட்டினார் ரோகித் ஆர்யா.
இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் 17 பேரை பணய கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்டியவரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது.
- புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.
- சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார்.
புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
வரும் நவம்பர் 24ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்கிறார்.
- இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது.
- எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
திக்ரி சட்டசபை தொகுதியில் இந்துஸ்தானி அவாம் கட்சி போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அனில்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்துஸ்தான் அவாம் கட்சி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அவர் வாக்கு சேகரிப்பதற்காக கயா மாவட்டத்துக்கு சென்றார். திதோரா கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்ற போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் தாக்கினார்கள்.
உள்ளூரில் சாலை அமைத்து தருமாறு அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தராததால் ஆத்திரமடைந்து கற்கள் மற்றும் செங்கற்களால் கடுமையாக தாக்கினார்கள்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது. கை மற்றும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது. கிராம மக்களின் தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் கார் சேதமானது.
இந்த தாக்குதல் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கற்களை வீசிய சிலரை போலீசார் கைது செய்தனர்.
- பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
- சாத் பூஜை திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி பீகார் தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சமாஸ்கிபூர், பெகுசராய் பகுதியில் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். முசாபர்பூரில் இன்று காலை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
இங்கு ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கூடி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.
சாத் பூஜை (சூரிய வழிபாடு) திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
பீகார் மக்களின் சூரிய வழிபாடு விழாவை காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி.) அவமதித்துவிட்டன. வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்.ஜே.டி. தலைவர்கள் சாத் திருவிழாவை அவமானப்படுத்துகிறார்கள். பீகார் மற்றும் நாட்டு மக்கள் இதை பொறுத்துக் கொள்வார்களா? நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்களா? நீங்கள் அவர்களை தண்டிப்பீர்களா? அல்லது இல்லையா?
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரை மேம்படுத்தி வருகிறோம். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரசால் ஒரு போதும் வளர்ச்சி அடைய செய்ய முடியாது. இந்த கட்சிகள் பல ஆண்டு களாக பீகாரை ஆட்சி செய்தன. ஆனால் அவர்கள் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர்.
ஆர்.ஜே.டி.-காங்கிரசால் கொடுமை, கசப்பு, தவறான ஆட்சி, ஊழல் உள்ளிட்ட 5 விஷயங்களில் அடையாளம் காண முடியும். ரெயில் வேயை கொள்ளையடித் தார்கள். பீகாரை மேம்படுத்த போவதாக சொல்வார்கள். பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி யில் குண்டர்கள் வாகன ஷோரூமை கொள்ளை அடித்தனர். 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கடத்தல் வழக்குகள் இருந்தன.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஏழைக ளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கினோம், பெண்களின் பெயரில் பதிவு செய்தோம். எங்கள் சகோதரிகளின் கஷ்டங்கள் குறையும் வகையில் குழாய் நீர் இணைப்புகள், இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி னோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
- கேரளாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அடுத்தாண்டு கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள 31.34 லட்சம் மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அல்லது போட்டித் தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் பலன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முத்துராமலிங்க தேவரின் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன்.
- விவசாயிகளின் நலனுக்கு தேவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன்.
நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.
கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






