என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்"
- மத்திய பட்ஜெட் கடந்த 2017-ல் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
- வருகிற பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிறு என்பதால், அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
பாராளுமன்றத்தில் கடந்த 2017-ல் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அட்டவணையை பாாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டம் வருகிற 28-ந்தேி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரண்டு அவை உறுப்பினர்களில் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவார். ஜனவரி 29-ந்தேதி அவைகள் நடைபெறாது.
ஜனவரி 30-ந்தேதி பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜனவரி 31-ந்தேதி இரண்டு அவைகளும் நடைபெறாது.
பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் பிப்ரவரி 13-ந்தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.
அதன்பின் ஒரு மாதகால இடைவெளிக்குப்பின் மார்ச் 9-ந்தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும். வழக்கமாக வெள்ளிக்கிழமைக்கு பிறகு பாராளுமன்றம் காலைவரையின்றி ஒத்திவைக்கப்படும். ஏப்ரல் 3-ந்தேதி புனித வெள்ளி என்பதால் விடுமுறையாகும். இதனால் வியாழக்கழமையே அவைகள் ஒத்திவைக்கப்படும்.
- முதல் அமர்வின் போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
- ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச்.13) தொடங்குகிறது.
புதுடெல்லி:
2023- 24 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையுடன், பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன.
முதல் அமர்வின் போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்த ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச்.13) தொடங்குகிறது.
இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் மற்றும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விற்கு முன்னதாக, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சபையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக புது டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார்.






