search icon
என் மலர்tooltip icon
  • பரமக்குடியில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

  பரமக்குடி

  மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடியில் சில நாட்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். பரமக்குடி நகரத்தலைவர் ரவி வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

  மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிமாறன், நாகேந்திரன், கணபதி கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ரஜினி காந்த், சிறுபான்மை பிரிவு மாநில செயாலாளர் அஜ்மல்கான், தொழில் பிரிவு மாநில செயலாளர் காளிஸ்வரன், ஊடகபிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • மதுரை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 50), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி செல்வி (47). சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  ராமநாதபுரம்

  தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மட்டும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் கார ணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

  இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வறண்ட பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும்.

  எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அந்நேரங்களில் பயணம் செல்ல நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்துச் செல்வதுடன் கண்ணாடி மற்றும் காலனி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்லவும். அனல் காற்று வீசும் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது போதுமான தண்ணீர் அருந்தவும். வீட்டில் தயாரித்து நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எலுமிச்சைசாறு போன்ற பானங்களை அருந்தவும். அனல் காற்று வீசும் காலங்களில் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். மேலும் குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்.பொதுமக்கள் குழந்தைக ளுக்கான வெப்ப தொடர்பான நோய்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும், குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். உடனே அருகில் அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.

  வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளவும். முதியவர்கள் வெப்ப அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவேளைகளில் நீர் அருந்தவும்.

  தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய மேற்கண்ட பாதுகாப்பு குறிப்புகளை கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.

  மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற பெண் இறந்தார்.
  • பெண் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

  மதுரை

  மதுரையில் ராஜா மில்ரோடு மகாதேவர் சுவாமி கோவில் அருகில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், அவரது பெயர் ஆரோக்கியமேரி (வயது48 )என்று தெரியவந்துள்ளது. ஆதரவற்ற அந்த பெண் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

  • திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில் ேதரோட்டம் நடந்தது.
  • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  மேலூர்

  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிடாரி அம்மன் சட்டத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • சோழவந்தானில் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி-உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
  • சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  சோழவந்தான்

  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தில் டான்பெட்டின் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம், உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. துணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், வாடிப்பட்டி கள அலுவலர் தங்க நாககுரு மற்றும் ராமலிங்கம் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டர்.

  வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள சோழவந்தான் 1, 2 திருவேடகம், தென்கரை , இரும்பாடி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி, மன்னாடிமங்கலம், சித்தாலங்குடி , கச்சைகட்டி , ராமையன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, நீரேத்தான் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  • மதுரை அருகே பள்ளி மாணவி திடீரென மாயமானார்.
  • சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.

  திருமங்கலம்

  மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் அறிவ ழகன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது15) மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் இருக்கும் வி.கள்ளப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு தாயுடன் சென்றிருந்தார். சம்பவத்தன்று உசிலம் பட்டியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார்.

  ஆனால் அதன்பிறகு பிரியதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாயமான அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.

  • மதுரை மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
  • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

  மதுரை

  மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 27 -ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புகார் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை 93804 14023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ombudsperson.mdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

  • மதுரையில் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்.
  • மேற்கண்ட தகவலை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

  மதுரை

  மதுரை பீ.பி.குளம் பி.டி.ராஜன்ரோடு ஏ.வி.ஆர். காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதிநிறுவனம் இயங்கி வந்தது. இதில் சேக்முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குனராக இருந்து கொண்டு பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தின் பகுதிகளை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக கூறி, உறுதிமொழியில் கூறியதுபோல் திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார்.

  இதில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து, அதுச ம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

  எனவே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால், அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.

  மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும், தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய 0452-2642161 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

  இந்த தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • சோழவந்தான், தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
  • நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

   சோழவந்தான்

  மதுரை மாவட்டம் சோழ வந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் வைகாசி மாத பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரவிச்சந்திர பட்டர், பரசு ராம சிவாச்சாரியார், அய்யப்பன் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.

  பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாக னத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.

  இந்த வழிபாட்டில் பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, வள்ளி மயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  நம்புதாளை கோவிலில் நந்திக்கு அபிஷேகம் நடந்தது.

  இதேபோல திருவேடகம் ஏலவார்க்குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சோழவந்தானை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றது.

  அதன்படி தொண்டி அருகே நம்புதாளையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவாலயமான அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் நந்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழங்கள், விபூதி, சந்தனம், அபிஷே கப்பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

  அதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பெண்கள் பலர் விரதமிருந்து கோவிலை வலம் வந்தனர்.

  பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிர சாதமாக வழங்கப்பட்டது.

  தொண்டி அருகே திருவாடானை ஆதிரெத்தி னேஸ்வரர், தீர்த்தாண்ட தானம் சர்வதீர்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.