பிடாரி அம்மன் கோவில் ேதரோட்டம்

திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில் ேதரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிடாரி அம்மன் கோவில் ேதரோட்டம்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிடாரி அம்மன் சட்டத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com