search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான், தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு
    X

    பிரளயநாதர் கோவிலில் உற்சவ மூர்த்திகள் உலாவந்த காட்சி.

    சோழவந்தான், தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு

    • சோழவந்தான், தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் வைகாசி மாத பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரவிச்சந்திர பட்டர், பரசு ராம சிவாச்சாரியார், அய்யப்பன் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.

    பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாக னத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.

    இந்த வழிபாட்டில் பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, வள்ளி மயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நம்புதாளை கோவிலில் நந்திக்கு அபிஷேகம் நடந்தது.

    இதேபோல திருவேடகம் ஏலவார்க்குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சோழவந்தானை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றது.

    அதன்படி தொண்டி அருகே நம்புதாளையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவாலயமான அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் நந்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழங்கள், விபூதி, சந்தனம், அபிஷே கப்பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பெண்கள் பலர் விரதமிருந்து கோவிலை வலம் வந்தனர்.

    பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி அருகே திருவாடானை ஆதிரெத்தி னேஸ்வரர், தீர்த்தாண்ட தானம் சர்வதீர்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    Next Story
    ×