என் மலர்
உத்தரப் பிரதேசம்
- ஆக்ரா, லக்னோ, கான்பூரில் வியாபாரிகளின் வீடுகள் உள்பட 6 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- இன்னும் பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த செருப்பு வியாபாரிகள் 3 பேர் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆக்ரா, லக்னோ, கான்பூரில் வியாபாரிகளின் வீடுகள் உள்பட 6 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
நோட்டுகளை எண்ண வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை ரூ.40 கோடி பணம் இருப்பது தெரியவந்தது. இன்னும் பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.
- நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
- கதவை உடைத்து உள்ளே சென்றபோது பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.
காசியாபாத்:
உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார்.
அவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கணவர் தாவணியால் மனைவியின் கழுத்தை சுற்றி சுருக்கு போட்டு இழுத்தார். இதில் அந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் நொறுங்கி அங்கேயே பிணமானார்.
மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த கணவர் பிணத்துடன் செல்பி எடுத்தார். மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
பிறகு செல்பி காட்சிகளை அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை தொடர்பு கொள்ள செல்போனில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்கு பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து அந்த நபரின் தம்பி காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.
அதே அறையில் கணவர் கொலை செய்ய பயன்படுத்திய அதே தாவணியை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நான் பேசுவதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார்.
- ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் சோனியாவுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-
தேர்தல் பிரசாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை மோடியால் சொல்லாமல் இருக்க முடியாது என்று நான் சமீபத்தில் பேசினேன்.
2 நாட்கள் கழித்து அதானி, அம்பானி பற்றி மோடி பேசினார். நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி காப்பி அடித்து பேசுகிறார்.
இதில் என்ன தெரிகிறது? என்னால் அவரை எந்த விசயத்திலும், எப்படியும் பேச வைக்க முடியும்.
நீங்களும் பிரதமர் மோடி ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் பிரசார மேடைகளில் பேசுகிறேன். அதை அடுத்த நாளே பிரதமர் மோடி எடுத்து பேசுவார்.
மோடி பிரசாரங்களில் இப்போது இதுதான் நடக்கிறது. புதிதாக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை.
இன்று இங்கு பேசிய எனது தாயார் ரேபரேலி தொகுதியை என்வசம் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.
பாரம்பரியமிக்க ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெருமையுடன் நான் இதை சொல்கிறேன். எனது தாயின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்களுக்காக உழைக்க 20 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
- பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
- கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மகளிர் அணி நடத்தும் பிரச்சாரக் கூட்டம் மே21-ந் தேதி , உத்தரபிரதேசத்தின் சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
இந்த பழமையான கல்வி நிறுவனம், பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ளது. இக்கூட்டத்தில், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மீதம் இரண்டு கட்ட பாராளுமன்றத் தொகுதிகளின் பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது, "பிரதமர் வேட்புமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர்.
இதைக் கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஏற்பாடு களும், நடவடிக்கைகளும் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர்" என்றார்.
பா.ஜ.க.வின் இந்த வித்தியாசமான பிரச்சாரக் கூட்டத்திற்காக அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் விநியோகித்து வருகின்றனர்.
இக்கூட்டத்தில் வாரணாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பாராளு மன்றத் தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்ய முயற்சிக்கப்படுகிறது.
இதன்மூலம், பா.ஜ.க. மகளிர் அணியினரும், பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கட்சித் தலைமையிடம் பாராட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அத்துமீறல்.
- பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் சாலையோரம் இருந்த மதுபானக் கடை அருகே கடந்த செவ்வாக்கிழமை இரவு 8 மணியளவில் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு தெருவோரமாக சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் இருந்து நபர் ஒருவர் திடீரென பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பெண் அலறி சத்தம் போட்டதை அடுத்தும், அந்த வழியாக பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து, ராவத்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.
- நரேந்திர மோடி ஜி உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன்.
- இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது பிரதமர் மோடியை என்ன வேண்டுமென்றாலும் என்னால் சொல்ல வைக்க முடியும் எனக் கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-
நரேந்திர மோடி ஜி, உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன். இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.
வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் taka-tak taka-tak taka-tak... என நான் சொன்னேன். பின்னர் பிரதமர் மோடி அவரது பேச்சில் taka-tak பயன்படுத்தினார்.
மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதை, அதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும். அதேபோல் பிரதமர் மோடியிடம் ஏதாவது சொல்ல விரும்பவில்லை என்றாலும், நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.
- எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள்.
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள்.
இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக "வாக்கு ஜிஹாத்" செய்தவர்களுக்கு கொடுப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள். ஆனால், குண்டுகளை பராமரிக்க பாகிஸ்தானிடம் போதுமான பணம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹமிர்பூரில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், பா.ஜனதாவின் கன்வார் புஷ்வேந்த்ரா சிங் சண்டல்- சமாஜ்வாடியின் அஜேந்திரா சிங் லோதி ஆகியோருக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது.
- ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
- அமேதி தொகுதியில் இந்த முறை சர்மா என்பவர் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் காந்தி குடும்பத்தை (ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) சேர்ந்தவர்கள் காலங்காலமாக போட்டியிட்டு வந்தனர்.
கடந்த மக்களவை தேர்தலின்போது அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிட்டனர். ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இதனால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதியில் சர்மா போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி தனது சகோதரருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறார். ரேபரேலி தொகுதி குடும்ப தொகுதி என பிரியங்கா காந்தி அடிக்கடி கூறி வருகிறார்.
இந்த நிலையில் அமித் ஷா அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "ரேபரேலி எந்த குடும்பத்தின் தொகுதியும் கிடையாது. அது மக்களுடைய தொகுதி" என்றார்.
மேலும், இயற்கை பேரழிவுகள் அல்லது விபத்துகளின் போது காந்தி குடும்பம் ரேபரேலிக்கு சென்றதில்லை என்று பாண்டே கூறியது சரிதான் என்றார்.
சமாஜ்வாடி எம்.எல்.ஏ. பாண்டே இன்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் காங்கிரஸ் அதை நிராகரித்தது. காங்கிரஸ் ஆட்சியை வந்தால் அயோத்திக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் என்றார்.
- அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
- பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
கடந்த இரு பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை எதிர்த்து அஜய் ராய் களம் இறங்கினார். தற்போது மோடியை எதிர்த்து தொடர்ந்து 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
54 வயதான அவர் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபித் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கினார். பின்னர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
1996-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் கோலஸ்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-ம் ஆண்டிலும், பின்னர் 2007- ம் ஆண்டிலும் தேர்தலில் வென்றார். 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதால் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.
அந்த தேர்தலில் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றார்.
2009-ம் ஆண்டு கோலஸ்லா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அஜய் ராய் 2012- ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 -ம் ஆண்டு தேர்தல்களில் அஜய்ராய் 3-வது இடத்தை பிடித்தார். 2014-ம் ஆண்டு 7.34 சதவீத வாக்குகளும், 2019-ம் ஆண்டு 14.38 சதவீத வாக்குகளும் பெற்றார்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
- ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.
சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.
காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.
பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.
புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.
இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
- ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல.
- தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது.
ரேபரேலி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ராகுல்காந்தி பற்றி கூறுகையில், ஒரு சகோதரியாக, என் சகோதரர் மகிழ்ச்சியான மனிதராக இருக்க விரும்புகிறேன். அவர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கினால் மகிழ்ச்சி அடைவீர்களா என்ற கேள்விக்கு, அது ஆட்சிக்கு வந்தால் இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என்று அவர் பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், `நாங்கள் இருவரும் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறோம். நான் 15 நாட்களாக இங்கே இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல என்பதால் எங்களில் யாராவது ஒருவர் இங்கு இருக்க வேண்டும்.
நாங்கள் இங்கு கடுமையாக உழைத்துள்ளோம். இந்த தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது. நாங்கள் சுற்றி இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






