நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் மயங்கி விழுந்து பலி... அதிர்ச்சி வீடியோ

சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. சிறுவனின் மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் மயங்கி விழுந்து பலி... அதிர்ச்சி வீடியோ
Published on

உத்தபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் 15 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் வெகு நேரமாக குளித்து மகிழ்ந்துள்ளார். பின்னர் வெளியே வந்த சில நிமிடங்களில் அந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com