ஒரே பைக்கில் 7 பேர் பயணம் - 9,500 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை

7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
ஒரே பைக்கில் 7 பேர் பயணம் - 9,500 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை
Published on

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூர் பகுதியில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், ஹாப்பூர் போலீசார் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு 9,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு இதே ஊரில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் 22,000 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com