என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
    • மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்

    1980 - ம் ஆண்டு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. 1984-ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார்.

    'தளபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஷோபனா பிரபலமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் தற்போது அறிவித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்





    இப்படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.மேலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    மேலும் நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இப் படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹீரோ மோகன்லால் சார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என  கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
    • அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு சித்து ஜொனலகட்டா நடிப்பில் அறிமுக இயக்குனரான விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிஜே டில்லு.

    நேஹா ஷெட்டி, பிரின்ஸ் செசில் , பிரம்மாஜி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.

    அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி  கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 125 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாம் பாகமும் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

    படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அரண்மனை-4' படம் ஒரு வாரம் தள்ளி வெளியிட சுந்தர். சி முடிவு செய்து உள்ளார்
    • மே. 3 -ந்தேதி அரண்மனை - 4 'ரிலீஸ்' செய்யப்படும் என சுந்தர்.சி அறிவித்து உள்ளார்.

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் நடித்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

    இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய 3 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

    மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இதன் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது.




    அரண்மனை -4 படம் வருகிற 26-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே தினத்தில் விஷாலின் ரத்னம் படம் :ரிலீஸ்' செய்யப்படுகிறது.

    இந்நிலையில் விஷாலின் 'ரத்னம்' படத்திற்கு வழிவிடும் வகையில் சுந்தர்.சி யின் 'அரண்மனை-4' படம் ஒரு வாரம் தள்ளி வெளியிட சுந்தர். சி முடிவு செய்து உள்ளார் அதன்படி வருகிற மே. 3 -ந்தேதி அரண்மனை - 4 படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என சுந்தர்.சி அறிவித்து உள்ளார்.

    முதலில் அறிவிக்கப்பட்ட தேதியை விட ஒரு வாரம் தாமதமாக இப்படம் வெளியாகும் என்பதால் ரசிகர்களுக்கு நீண்ட காத்திருப்பு இருக்காது எனவும் அவர் கூறி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    • இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவில் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். 

    கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில்  இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

    படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. தற்பொழுது படம் வரும் மே 3 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குசாவடியில் அலையென திரண்ட மக்களுக்கு மத்தியில் வாக்களித்தார். நடிகர் சூர்யா, கார்ஹ்த்டி, சிவகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, செல்வ ராகவன், தனுஷ், வெற்றி மாறன் ரத்ன குமார், கமல்ஹாசன், திரிஷா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் அவர்களின் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.
    • படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

    மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதற்கடுத்து துல்கர் சல்மானுடன் சோலோ என்ற படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் தன்ஷிகா 'தி ப்ரூஃப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். நடன இயக்குனரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன் வெளியானது, படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலை ஏப்ரல் 20 ஆம் தேதி இசையமைப்பாளர் இமான் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். இப்படத்தில் அறிமுக இசையமைப்பாளரான தீபக் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இம்மாத இறுதியில் துவங்குகிறது.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

    மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்
    • திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது.

    அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இனியானது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.
    • யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .

    டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடலான விண்டேஜ் லவ் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டாடா வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் கவினுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா' படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது
    • புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    புஷ்பா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது புஷ்பா 2 அதை விட அதிக தொகைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    புஷ்பா 2 படத்தின் இந்தி மொழி உரிமத்தை தயாரிப்பாளர் அனில் தடானி 200 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. எனவே இந்தியில் மட்டுமே 500 கோடிக்கு மேல் புஷ்பா 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    இதற்கு முன்பு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே அதிக பட்சமாக 175 கோடிக்கு 3 ஓடிடி நிறுவனங்களிடம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது
    • விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார். 

    மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.  48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.

    நடிகை ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது :-




    எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பல நிராகரிப்பு, அவமானங்களை நான் சந்தித்தேன். ஏமாற்றம், மனச்சோர்வு அடைந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

    நான் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் நான் என் தந்தையுடன் வேலை செய்ய விரும்பினேன். புதிதாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது.

    இந்நிலையில் ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது. ஒரு புகைப்படக்கலைஞர் என்னை படம் எடுத்தார். அதன் மூலம் பேஷன் துறைக்கு அறிமுகமானேன்.அதன் பிறகு எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.



    நான் நடிக்க வந்தபோது எனக்கு வயது 17. அப்போது நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.இந்தியில் பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டமாக இருந்தது. அதன்பின் முயற்சி செய்து நடித்து பிரபலமானேன்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பாகுபாடு காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் நான் விடாப்பிடியாக இருந்தேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஒரு அடி கூட பின்வாங்க மனமில்லை.




    நான் வெற்றி பெற்ற பிறகு, என்னை பலர் பாராட்டினர். எனது விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது. தற்போது நான் ஒரு வலிமையான சுதந்திர பெண்ணாகவும், நடிகையாகவும், மனைவியாகவும், தாயாகவும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். இவர்களுக்கு வியான் மற்றும் ஷமிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஆடம்பர பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமாக 'ஜெட்' விமானம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×