அரண்மனை 4 'ரிலீஸ்' தேதியை தள்ளி வைத்த சுந்தர்.சி - 'புது அப்டேட்'

'அரண்மனை-4' படம் ஒரு வாரம் தள்ளி வெளியிட சுந்தர். சி முடிவு செய்து உள்ளார்மே. 3 -ந்தேதி அரண்மனை - 4 'ரிலீஸ்' செய்யப்படும் என சுந்தர்.சி அறிவித்து உள்ளார்.
அரண்மனை 4 'ரிலீஸ்' தேதியை தள்ளி வைத்த சுந்தர்.சி - 'புது அப்டேட்'
Published on

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் நடித்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய 3 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இதன் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது.

அரண்மனை -4 படம் வருகிற 26-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே தினத்தில் விஷாலின் ரத்னம் படம் :ரிலீஸ்' செய்யப்படுகிறது.

இந்நிலையில் விஷாலின் 'ரத்னம்' படத்திற்கு வழிவிடும் வகையில் சுந்தர்.சி யின் 'அரண்மனை-4' படம் ஒரு வாரம் தள்ளி வெளியிட சுந்தர். சி முடிவு செய்து உள்ளார் அதன்படி வருகிற மே. 3 -ந்தேதி அரண்மனை - 4 படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என சுந்தர்.சி அறிவித்து உள்ளார்.

முதலில் அறிவிக்கப்பட்ட தேதியை விட ஒரு வாரம் தாமதமாக இப்படம் வெளியாகும் என்பதால் ரசிகர்களுக்கு நீண்ட காத்திருப்பு இருக்காது எனவும் அவர் கூறி உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com