சுபாஷை மீட்டெடுக்க ஓடிடி- யில் வருகிறார்கள் மஞ்சும்மல் பாய்ஸ்

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுபாஷை மீட்டெடுக்க ஓடிடி- யில் வருகிறார்கள் மஞ்சும்மல் பாய்ஸ்
Published on

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவில் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். 

கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில்  இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. தற்பொழுது படம் வரும் மே 3 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com