என் மலர்
சினிமா செய்திகள்
- தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார்.
சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.
இதற்கிடையில் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ஒரு பீரியாடிக் கதைக்களத்துடன், சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். தக் லஃப் படப்பிடிப்பை முடித்துவிட்டு STR48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
இந்நிலையில் சிம்புவின் 50 - வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. சுதா கொங்கரா தற்பொழுது பாலிவுட்டில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை எடுத்து முடித்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து கொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு சிம்புவின் 50- வது திரைப்படத்தை இயக்குவார் என நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா.
- இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் நேற்று ஐதராபாத் விமான நிலையம் வந்தனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.
ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். அதில் அந்த முதியவர் நிலை தடுமாறி விழப்போக பின் தட்டு தடுமாறி அவர் விழாமல் நிற்கிறார். இதை நடிகர் நாகர்ஜுனா பார்த்தும் பார்க்காததுப் போல் கடந்து போகிறார். அவருக்கு பின் வந்த தனுஷ் இவரையும் அந்த ஊழியரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பதிவை பார்த்து விட்டு நாகர்ஜுனா செய்தது மிகப்பெரிய தவறு, மனிதாபமற்ற செயல், இதற்கு அவர் கண்டிப்பாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
- வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின். அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படம் இதுவரை 25 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்பொழுது வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
- சாய்பல்லவி முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி இந்தியில் தயாராகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது. சீதை கதாபாத்திரத்துக்கு சாய்பல்லவி பொருத்தமானவர் இல்லை என்று ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லட்சுமணனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறும்போது,"அனிமல் படம் பார்த்த பிறகு அதில் நடித்திருந்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவரது முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை. எனவே சீதையாக அவர் எப்படி நடிக்கப் போகிறார் என்று எனக்கு புரியவில்லை. சாய்பல்லவி நடித்த படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை'' என்றார். சுனில் லாஹ்ரி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது.
- பட வாய்ப்பை நிராகரித்த தகவல் வலைத்தளத்தில் வைரலாகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்தார்.
அனுஷ்காவுக்கு திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது. எடையை குறைக்க கடும் உடற்பயிற்சிகள் செய்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மிஸ் செட்டி மிஸ்டர் போலி செட்டி' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் வித்தியாசமான கதையம்சத்தில் தயாராகிறதாம்.

சில தினங்களுக்கு முன்பு முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரூ.5 கோடி சம்பளம் தருவதாகவும் பேசி உள்ளனர்.
ஆனால் அதில் நடிக்க அனுஷ்கா மறுத்து விட்டார். அந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் நடிக்க மறுப்பு சொன்னாராம், ரூ.5 கோடி பட வாய்ப்பை அனுஷ்கா நிராகரித்த தகவல் வலைத்தளத்தில் வைரலாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது
- சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.
திரைப்படங்களுக்கு கிடைக்கும் அதிகப்பட்ச அங்கீகாரம் ரசிகர்களின் கைதட்டலே என்றாலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் தாங்கள் பிரசவித்த திரைப்படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இயக்குனருக்கு பெரும் உத்வேகத்தையும் தங்களின் பாதையில் சரியாவே பயணிக்கிறோம் என்ற உறுதியையும் தருவதாக அமைந்துள்ளது.
அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது. டீசர்மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொட்டுக்காளி பட இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகை அனா பென் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இதுதவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
- இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.


இயக்குனராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின்மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இடையில் நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுபொருளாக மாறியது.
தொடர்ந்து தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நீலம் தயாரிப்பு நிறுவனம் நாளை மாலை இந்த படத்தின் டைட்டில் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக்கும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், மகிழ்ச்சி, பரவசம் மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.
- குருவே சரணம் என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதுவரையில் பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.
இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி அது ராகவா லாரன்ஸின் கண்ணில் பட, அந்த வீடியோவை லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் டிரெண்டாகியது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது, "தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசீர்வாதம் வாங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும், குருவே சரணம்" என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
I'm so happy to meet Thailavar superstar @rajinikanth to take blessings for the #Maatram Foundation! Guruve Saranam ?? #serviceisgod pic.twitter.com/0w8gBXd8a9
— Raghava Lawrence (@offl_Lawrence) June 23, 2024
- இறுதிப்போட்டியில் ஐந்து பேர் பலப்பரீட்சை.
- இறுதிப்போட்டி கொண்டாட்டத்துடன் நடைபெறுகிறது.
தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10-வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப்போட்டி, ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன் இன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ளது.
பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டியே திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர்.
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
- எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.
ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.
- இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும்
நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார்.

அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டராக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.
ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும்.
நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர் சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான்.
விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவை தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அது வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும்.
விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கனும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கனும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கனும்.
நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.






