கலக்கலான சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 இறுதிப்போட்டியை எட்டியது

இறுதிப்போட்டியில் ஐந்து பேர் பலப்பரீட்சை. இறுதிப்போட்டி கொண்டாட்டத்துடன் நடைபெறுகிறது.
கலக்கலான சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 இறுதிப்போட்டியை எட்டியது
Published on

தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10-வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப்போட்டி, ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன் இன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ளது.

பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டியே திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com