காதலனை கரம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா.. வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்

திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
காதலனை கரம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா.. வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்
Published on

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.     

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com