என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
    • அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

    படங்கள் திரைக்கு வரும் முன்பே அதற்கு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிக பெரிய விஷயம் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் அதில் பணியாற்றி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மாபெரும் வெற்றி ஆகும். அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் "ஏழு கடல் ஏழு மலை",

    கடந்த 2024 ஜனவரியில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.


    இந்நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மற்றுமொரு விழாவான ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    ராம் இயக்கி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
    • ரசிகர்கள் காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவர்கள் ஹீரோவாகத் தான் நடிப்பார்கள். ஆனால் இதற்கு இணையாக தற்போது வரை த்ரிஷா ஹீரோயின் ஆகவே நடித்து வருகிறார்.

    அதிலும் விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.


    நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்த லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் மூலம் இவரோட கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் த்ரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். த்ரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.


    இந்த பதிவிற்கு விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் "The most special wish for Thalapathy GOALS" என்று காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

     


    இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதோடு, கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்து இருக்கிறது. அந்த வகையில், இந்தியன் 2 படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக் கான் ஏற்கனவே ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்துள்ளார்.
    • சமந்தா முதன்முறையாக ஷாருக்கான உடன் நடிக்க உள்ளார்.

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த டங்கி படம் வெற்றி பெற்றது. இந்த படம் விசா இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்பவர்களின் அவலை நிலையை காட்டுவதை கருவாக கொண்டதாகும். இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் புதுப்படம் மூலம் இணைய இருக்கிறது.

    இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஷாருக் கான் ஏற்கனவே ஜவான் படத்தில் தென்இந்திய நடிகையான நயன்தாராவுடன நடத்தியுள்ளார். தற்போது சமந்தா உடன் நடிக்க இருக்கிறார்.

    அதிரடியான தேசபக்தி கொண்ட படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா கடைசியாக 2023-ல் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'பர்ஹானா', 'மான்ஸ்டர்' மற்றும் 'ஒரு நாள் கூத்து' போன்ற சிறந்த படங்களை உருவாக்கி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
    • நிமிஷா சஜயன் தனது யதார்த்தமான மற்றும் அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்.

    ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாடா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து பல படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது.

    அவற்றில் ஒன்றுதான் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'டிஎன்ஏ'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

     

     

    தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவரான அதர்வா முரளியின் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வா முரளி பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகனாகவும் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராகவும் இருக்கிறார். நிமிஷா சஜயன் தனது யதார்த்தமான மற்றும் அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்.

    இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'பர்ஹானா', 'மான்ஸ்டர்' மற்றும் 'ஒரு நாள் கூத்து' போன்ற சிறந்த படங்களை உருவாக்கி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.இந்த மூன்று அற்புதமான ஆளுமைகளும் 'டிஎன்ஏ' படத்திற்கு ஒன்றிணைந்துள்ளது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

    படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தை ஆகஸ்ட் 2024 இல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.
    • இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

    Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.

    புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

     

     

    இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோருடன் சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     

    இப்படத்துக்கு  இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
    • இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இதைதொடர்ந்து, விஜய்யின் 50-வது பிறந்த நாளை ஒட்டி கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. அதனபடி சின்ன சின்ன கண்கள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்து வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் யுவனின் தங்கையும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் ஏ.ஐ குரலில்  இந்த 'சின்ன சின்ன கண்கள் பூக்கிறதோ' பாடல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக நேற்று நள்ளிரவு 12 ணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு GOAT படத்தின் 50 வினாடிகள் கிலிம்ஸ் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்து அரசியல் கட்சித் தலைவராக பரிணமித்துள்ள நடிகர் விஜய்  இன்று [ஜூன் 22] தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் ஆகியோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யின் 68 வது படமான GOAT படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபுவும், நடிகரும் மக்கள் நீதி மைய்யத் தலைவர் கமல் ஹாசனும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    GOAT படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வளைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது வாழ்த்து செய்தியில், எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு மிகவும் மேஜிக்கலாக அமைந்தது. வாய்ப்புக்கும் கோட் பட செட்டில் உங்களுடன் ஏற்பட்ட நியாபங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

    இசையமைப்பாளர் அனிருத் தனது வாழ்த்து செய்தியில், 'என் அன்பு விஜய் சாருக்கு வாழ்த்துகள், இந்த வருடமும் உங்களுக்கு சிறந்ததாக அமையும், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஒன் அண்ட் ஒன்லி தளபதி விஜய் சார். லவ் யூ' என வாழ்த்து தெரிவித்துளளார். விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கிய பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீயும் தனது வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.

     

    இதுதவிர GOAT பட கதாநாயகி மீனாட்சி சவுத்திரி, நடிகை லைலா ஆகோயோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் ரீரிலீஸ் செயப்பட்டன. மேலும் GOAT படத்ததின் கிளிம்ஸ் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நேற்று நள்ளிரவு வெளியிட்டது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு GOAT படத்தில் இடமபெற்றுள்ள சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அஃலி' படத்திலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் அஜித்தின் பைக் பயணத்தால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று தாமதமான நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

    மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு படமாக்கப்படும் என்று தெரிகிறது. இடையில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனோடு அஜித் இணைந்துள்ள 'குட் பேட் அஃலி' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையொட்டி சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

     

    இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது ஆரம்ப காலங்களில் கார் ரேஸராக இருந்தார்.

    திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றாலும் அவ்வப்போது ரேஸிங்கில் ஈடுபட்டு தனது ஆர்வத்துக்கு தீனி பிட்டுகொள்வது வழக்கம். படங்களில் இடம்பெறும் அஜித்தின் ரேஸிங் சாகச காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளையும் அஜித் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து தயாராகி வரும் புதிய படம் ' பேட்ட ராப்'.
    • பாலிவுட் நடிகை சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்.

    திரை இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மையோடு இந்திய சினிமாவில் இயங்கி வரும் பிரபுதேவா தமிழ் சினிமாவில் நடிகராக தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த பகீரா திரைப்படத்தில் நெகட்டிவ் சேட் கொண்டு பல கெட்டப்களில் மிரட்டியிருபார்.

    தற்போது எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து தயாராகி வரும் புதிய படம் ' பேட்ட ராப்'. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    பேட்ட ராப் படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பேட்டராப் படத்தின் டீசர் ஜூன் 21 வெளியாகும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த டீசரில் பாட்டு- அடி - ஆட்டம் - ரிப்பீட்டு என்ற வாசனகங்களுடன் பிரபுதேவாவின் கலர்ஃபுல் நடனம் இடம்பெற்றுள்ளது.

     

     

    'பேட்ட ராப்' தவிர்த்து பிரபுதேவா நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜாலியா ஜிம்கானா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளார். BEHINDWOODS தயாரிப்பில் பிரபுதேவா - ஏ.ஆர்.ரகுமான் 25 வருடங்களுக்கு பின் இணையும் 'மூன் வாக்' படமும் தயாராகி வருகிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'GOA'T திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தல பதிவில் தெரிவித்துள்ளார்.
    • இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்த வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்த இன்று அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்த வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தல பதிவில் தெரிவித்துள்ளார்.

    அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!

    காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×