மீண்டும் டிராக்கில் சீறிப்பாயும் அஜித்.. வைரல் வீடியோ

சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மீண்டும் டிராக்கில் சீறிப்பாயும் அஜித்.. வைரல் வீடியோ
Published on

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அஃலி' படத்திலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் அஜித்தின் பைக் பயணத்தால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று தாமதமான நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு படமாக்கப்படும் என்று தெரிகிறது. இடையில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனோடு அஜித் இணைந்துள்ள 'குட் பேட் அஃலி' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையொட்டி சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது ஆரம்ப காலங்களில் கார் ரேஸராக இருந்தார்.

திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றாலும் அவ்வப்போது ரேஸிங்கில் ஈடுபட்டு தனது ஆர்வத்துக்கு தீனி பிட்டுகொள்வது வழக்கம். படங்களில் இடம்பெறும் அஜித்தின் ரேஸிங் சாகச காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளையும் அஜித் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com