என் மலர்
சினிமா செய்திகள்
- பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து கான்சர்ட் நடந்துள்ளது.
- 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர்
அமரிக்கவைச் சேர்த்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட் இசைத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஐகானாக உள்ளவர். எல்லைகள் தாண்டி உலாமெங்கிலும் இவரின் பாடல்களுக்கு பலர் பைத்தியாக உள்ளனர். தனது பாடலக்ளை தானே இயற்றி கான்சர்ட்களில் பாடிவரும் டெய்லர் ஸ்விப்ட் நின்றால் செய்தி உட்கார்ந்தால் செய்தி என ஆகிவிட்ட நிலையில் பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து நடந்த இவரின் கான்சர்ட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அந்த கான்சர்ட்டில் தனது சிறந்த பாடல்களில் ஒன்றான 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 நிமிட நீளம் உடையது ஆகும். 'All Too Well' பாடலை விடமால் தம் கட்டி சிவப்பு நிற ஆடையில் ஜொலித்த டெய்லர் ஸ்விப்ட் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது வாய்க்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பூச்சி நுழைந்ததால் பாடலைத் தொடர அவர் சிரமப்பட்டார்.
இடையில் பாடுவதை நிறுத்திவிட்டு இருமத் தொடங்கிய டெய்லர் ஸ்விப்ட், நான் ஒரு பூச்சியை விழுங்கிவிட்டேன், நீங்கள் தொடர்ந்து பாடுங்கள் என்று ரகிகர்களிடம் கூறினார். பின்னர் நிலைமையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அவர் பாடத்தொடங்கினார்.இந்த சமபவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கான்சர்ட்டில் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், மிலா குனிஸ், ஆஸ்டோன் குட்சர், டெய்லர் ஷிப்டட்டின் காதலன் கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டது குறிபிடித்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

இந்நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து நலிவடைந்து வருவதும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமின்றி அவதிப்பட்டு திரையுலகை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்பதும் அதிகரித்து விட்டது.
வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் தமிழகம் வந்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது சிகிச்சைக்கு உதவும் படி கோரிக்கையும் வைத்தார்.
அவருக்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் உதவினார்கள். ஆனாலும், அவர் உயிரிழந்தார். அதேபோல், நடிகர் அல்வா வாசுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நடிகர் பாவா லட்சுமணனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு KPY பாலா உட்பட சிலர் உதவினார்கள்.
இந்த நிலையில், நடிகர் வெங்கல் ராவ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு இவர்கள் எல்லாம் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றிருக்க வேண்டியவர்கள்.
- "இந்தியன் 2" படத்தை 6 வருடம் எடுத்ததற்கு நாங்களோ, தொழில்நுட்பமோ, தொழில்நுட்ப கலைஞர்களோ, நட்சத்திரங்களோ காரணமல்ல.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன்,
"இந்தியன் 2" 2-ம் பாகத்தில் நடிப்பது பெருமை. 2-ம் பாகம் எடுப்பதற்கான கருவை இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.
ஊழல் அதிகமானதுதான் இந்தியன் தாத்தா வருவதற்கு பெரிய அர்த்தமே இருக்கிறது.
விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு இவர்கள் எல்லாம் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றிருக்க வேண்டியவர்கள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, இந்தியன் 2 ஒரு உதாரணம்.
நாங்கள் திரும்பி பார்ப்பதற்குள் சங்கர் என்ற இளைஞர் இளைஞராகவே இருக்கிறார். நான் தாத்தாவாகி போனதால் வித்தியாசம் தெரியவில்லை.
இந்த மாதிரி மேடைகளில் வழக்கமாக 2 பேர் சண்டை போட்டுக்கொள்வார்கள். மாற்றுக்கருத்து இருக்கும். சங்கரும், கமலும் இணைந்து இதே போல் படம் எடுத்து இருக்கிறோம் அதுதான் இந்தியன் 3. இந்த மேடையில் இதை பேசக்கூடாது.
"இந்தியன் 2" படத்தை 6 வருடம் எடுத்ததற்கு நாங்களோ, தொழில்நுட்பமோ, தொழில்நுட்ப கலைஞர்களோ, நட்சத்திரங்களோ காரணமல்ல.
இயற்கை, கொரோனா வைரஸ், விபத்துக்கள் என பல விஷயங்கள் எங்களுக்கு இடையூறாக வந்தது.
அதில் இருந்து எல்லாம் எங்களை மீட்டு தோளில் சுமந்துவந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் என்றென்றும் இந்தியன் 2, இந்தியன் 3 கடமைப்பட்டது.
அதன் வெற்றியை அனுபவிக்கும் முதல் ஆட்கள் அவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் சங்கர் அவர்களுக்கும் எனக்கும் ஆசையாக இருக்கிறது. அதையடுத்து ஒரு ரசிகனாக ஏற்றெடுத்த உதயநிதி அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தையும், நடிகனையும், டைரக்டரையும் பெரிதாக ரசிக்கிறார் என்பது தான் உண்மை.
இங்கு இருக்கும் நண்பர்கள் எல்லோரும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்தது போல் தெரியவில்லை. சந்தோஷமாக நடித்தார்கள். அதுபோல் வாய்ப்பது மிகவும் கடினம்.
இந்த படம் பல சாதனைகளை படைக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதனால் அடுத்த விழாவில் விட்டதை பிடித்துக்கொள்ளலாம்.
இனி நீங்கள் கொடுக்கப்போகும் பாராட்டு, விமர்சனங்கள் அனைத்துக்கும் நன்றி என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள பட நிறுவனம், அடுத்த மாதம் 27-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Get ready to witness this epic face-off ?#Raayan in cinemas from July 26 ??@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art… pic.twitter.com/xHNWuSJpmJ
— Sun Pictures (@sunpictures) June 25, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதே சிலிர்ப்பு 25 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கு.
- கமல் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய இயக்குநர் சங்கர், இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. இந்தியன் 1 கதை தமிழகத்திற்குள் நடப்பது போன்ற சம்பவங்களை கொண்டிருந்தது. இந்தியன் 2 தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் பேசுகிறது. இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு.
இந்த படம் உங்கள் ஒவ்வொருத்தரையும் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக வருவதற்கு முதல் காரணம் கமல்ஹாசன் தான். முதல் பாகத்தில் கூட 40 நாட்கள் தான் சிறப்பு வேடம் போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு தினமும் சிறப்பு வேடம் போட வேண்டி இருந்தது.
மேக்கப் காரணமாக படப்பிடிப்பு துவங்கும் முன்பே வந்து, படப்பிடிப்பு முடிந்தும் எல்லோரும் புறப்பட்ட பிறகே கமல்ஹாசன் புறப்பட்டு சென்றார். அவரது மேக்கப்-ஐ போடுவதற்கும், அழிப்பதற்கும் 1 மணி நேரம் ஆகிவிடும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசனை முதல்முறை பார்த்த போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே சிலிர்ப்பு 25 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கு.
முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. இந்தமுறை மேக்கப் சார்ந்த நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதால், மிகவும் மெல்லிய செயற்கை சருமம் மேக்கப் ஆக போட்டிருக்கிறோம். இதனால், கமல்ஹாசனின் நடிப்பை கடந்த பாகத்தில் இருந்ததை விட இந்த பகாத்தில் அதிகளவில் பாரக்க முடியும்.
கமல்ஹாசனுக்கு எந்த மாதிரி சவால் கொடுத்தாலும், அவர் அதை சிறப்பாக செய்கிறார். அவர் நடிக்கும் காட்சியை படமாக்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பா இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான இசையை அனிருத் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னோட நன்றி. படத்தில் ஒவ்வொரு டியூனும் 100 சதவீதம் ஓ.கே. சொல்லும்வரை திரும்ப திரும்ப செய்து கொடுத்தார். படத்தில் நடிகர் விவேக் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை.
- நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.
90-க்களில் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது. தனது கம்பீர குரலால் அறியப்படும் அப்துல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யாரும் மறந்துவிட முடியாது. அப்துல் ஹமீது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை என அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று முதல் இன்று வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து நான் என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.
சிலர் என் குரலை கேட்டு கதறி அழுததை கேட்டேன். என்னால் அதை தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தேன் என்று நினைத்துக் கொண்டேன் என்று பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார்.
- அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. அதற்கு அடுத்து பெரிய அளவில் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியீட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இதய ஈமோஜியை பறக்க விட்டு வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது.
- படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.
அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீ போல பரவின.
அண்மையில், விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது என்று நடிகர் அர்ஜுன் அப்டேட் கொடுத்தார்,
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.
The big update #vidaamuyarchi shoot resumes #Azerbaijan.
— Suresh Chandra (@SureshChandraa) June 24, 2024
#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran@trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa pic.twitter.com/pQ33FDUXCS
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி விடாமுயற்சி படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
- இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும்.
பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 2 வாரங்களில் 100 மில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பாக THE SUPER MARIO BROS, 92 மில்லியன் டாலர் வசூலை குவித்து, வெளியான 2வது வாரத்தில் அதிக வசூலை பெற்ற அனிமேஷன் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.
உலகம் முழுவதும் Inside Out 2 திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்து இந்தாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக பார்பி திரைப்படம் தான் 1 பில்லியன் டாலரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்
- ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.
ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.
இயக்குநராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின்மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இடையில் நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'பாட்டல் ராதா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படம் மகிழ்ச்சி, பரவசம் மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி.
- ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி. அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 வெற்றி படங்களை இயக்கினார்.
பின் சிறு இடைவேளைக்கு பின் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அட்லி களம் இறங்கினார் . ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது ஜவான் திரைப்படம், இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் உச்சத்தை தொட்டது. இதுவரை ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் கவனம் அட்லியின் மீது திரும்பியுள்ளது. அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
நமக்கு மாபெரும் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என பலரின் ஆசையாக இருக்கும், பாலிவுட்டை எடுத்துக் கொண்டால் ஷாருக்கான், சல்மான் கான் என்ற போட்டி எப்பொழுதும் இருக்கும், கோலிவுட்டை எடுத்துக் கொண்டால் ரஜின் ,கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் இடையே இருக்கும்.
ஆனால் இயக்குனர் அட்லி புதுவிதமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானையும் , கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தையும் ஒன்றாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு ட்யுவல் ஹீரோ கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்புகள் அடுத்த மாதம் நடக்கும் எனவும், இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் மட்டும் சாத்தியாக நடைப்பெற்றால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்கள் சிதறடிக்கப்படும், இச்செய்தி ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
- லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் தொழிலதிபராக மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
இவர் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பதிந்தார்.
அதன் பின்னர் இவர் 2022-ல் வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். ஜே டி ஜெர்ரி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை . மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சமீபத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த கருடன் திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.
இதற்குமுன் துரை செந்தில்குமார் கொடி, காக்கி சட்டை போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படத்தின் இயக்குனரான துரை செந்தில்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். தாடி, மீசை மற்றும் கையில் Gun உடன் காணப்படுகிறார். சிவகார்த்திகேயனுக்கு காக்கி சட்டை எப்படி ஒரு மாறுப்பட்ட ஆக்ஷன் ஹீரோ திரைப்படமாக அமைந்ததோ, சூரிக்கு கருடன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ. லெஜண்ட் சரவணனுக்கு இத்திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






