என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugadoss"

    • குழந்தைகளை ரசிகர்களாக கொண்ட கிராபிக்ஸ் படம்
    • ஆரம்ப காலத்திலிருந்தே எடுக்க நினைத்தப் படம்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மதராஸி. இதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தான் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து பேசியுள்ளார் முருகதாஸ்.

    இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், கிருத்திகா உதயநிதி, அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோருடன் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அப்படம்தான் தான் முதலில் இயக்கவேண்டும் என நினைத்த படம் என்றும், அது ஒரு கிராபிக்ஸ் படம், அதில் குரங்கு தான் மெயின் ரோல், அது குழந்தைகளுக்கானது எனவும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர்,

    "நான் எனது அடுத்தத் திரைப்படத்தை குரங்கை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு (கிராபிக்ஸ் படம்) இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதுவே எனது முதல் படமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்த படம், நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னிடம் இருந்தது. இந்தப் படம் முக்கியமாக குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

     

    • 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி.
    • ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி. அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 வெற்றி படங்களை இயக்கினார்.

    பின் சிறு இடைவேளைக்கு பின் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அட்லி களம் இறங்கினார் . ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது ஜவான் திரைப்படம், இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் உச்சத்தை தொட்டது. இதுவரை ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் கவனம்  அட்லியின் மீது திரும்பியுள்ளது. அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில்  தற்பொழுது மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    நமக்கு மாபெரும் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என பலரின் ஆசையாக இருக்கும், பாலிவுட்டை எடுத்துக் கொண்டால் ஷாருக்கான், சல்மான் கான் என்ற போட்டி எப்பொழுதும் இருக்கும், கோலிவுட்டை எடுத்துக் கொண்டால் ரஜின் ,கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் இடையே இருக்கும்.

    ஆனால் இயக்குனர் அட்லி புதுவிதமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானையும் , கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தையும் ஒன்றாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு ட்யுவல் ஹீரோ கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்புகள் அடுத்த மாதம் நடக்கும் எனவும், இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் மட்டும் சாத்தியாக நடைப்பெற்றால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்கள் சிதறடிக்கப்படும், இச்செய்தி ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×