என் மலர்
நீங்கள் தேடியது "அனிமேஷன் படம்"
- மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
- உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.
மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'
2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.
அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.
இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.
ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.
ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.
இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.
நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.
நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.
மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2'
மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5
- கடந்தாண்டு வெளியான MOANA 2 ஆம் பாகமும் பெருவெற்றி பெற்றது.
- இப்படத்தில் ராக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான MOANA அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான MOANA 2 ஆம் பாகமும் பெருவெற்றி பெற்றது.
அனிமேஷனில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற MOANA திரைப்படம் Live-action படமாக தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், MOANA Live-action திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. இப்படம் 2026 ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
- உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
- இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும்.
பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 2 வாரங்களில் 100 மில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பாக THE SUPER MARIO BROS, 92 மில்லியன் டாலர் வசூலை குவித்து, வெளியான 2வது வாரத்தில் அதிக வசூலை பெற்ற அனிமேஷன் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.
உலகம் முழுவதும் Inside Out 2 திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்து இந்தாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக பார்பி திரைப்படம் தான் 1 பில்லியன் டாலரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- Inside Out 2, வெளியான 19 நாட்களில் ரூ.12,000 கோடி வசூல் செய்துள்ளது.
- Inside Out 2 மட்டும்தான் இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம்
பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 19 நாட்களில் 1.462 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி) வசூலை சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு வெளியான Frozen 2 திரைப்படம் 1.45 பில்லியன் டாலர் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை Inside Out 2 முறியடித்துள்ளது.
இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம் என்ற சாதனையையும் Inside Out 2 படைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






