என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்பி"

    • அமெரிக்காவில் பார்பி பொம்மை போன்று வீடு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
    • பல்வேறு நாடுகளிலும் பார்பி பொம்மை நிறத்தினாலான பொருட்களும் தயாரிக்கப்பட்டிருந்தன.

    பாலிவுட் இயக்குனர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள பார்பி திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த படத்தினை பிரபல படுத்துவதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் பார்பி பொம்மை போன்று வீடு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

    இது தவிர பல்வேறு நாடுகளிலும் பார்பி பொம்மை நிறத்தினாலான பொருட்களும் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் டெல்லியின் கமலா நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பார்பி பொம்மை நிறத்தை போன்று இளம் சிவப்பு நிறத்தில் பர்கர், பப்பில்கம் மில்க் ஷேக், இளம் சிவப்பு பாஸ்தா மற்றும் அழகான உண்ணக்கூடிய வகையில் இளம் சிவப்பு நிற ஷூ போன்ற உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
    • இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும்.

    பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 2 வாரங்களில் 100 மில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பாக THE SUPER MARIO BROS, 92 மில்லியன் டாலர் வசூலை குவித்து, வெளியான 2வது வாரத்தில் அதிக வசூலை பெற்ற அனிமேஷன் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

    உலகம் முழுவதும் Inside Out 2 திரைப்படம் 724 மில்லியன் டாலரை வசூலித்து இந்தாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக பார்பி திரைப்படம் தான் 1 பில்லியன் டாலரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருப்பு நிற பார்பி, பார்வை மாற்றுத்திறன் பார்பி அறிமுகம்
    • பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்தது.

    1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பார்பி பொம்மைகள் உலக அளவில் இன்றும் மிக பிரபலமாக உள்ளது. பார்பி பொம்மையை மையமாக வைத்து வெளியான பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

    உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் பார்பி பொம்மைகளின் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றது. வெள்ளை நிறம், கச்சிதமான உடல் அமைப்பு ஆகியவை தான் அழகானவை என்ற தவறான தோற்றத்தை பார்பி உருவாக்குவதாக பலர் விமர்சித்துள்ளளனர்.

    இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் வகையில் பார்வை மாற்றுத்திறன் கொண்டது போன்ற பார்பி பொம்மையையும் உடல்நல குறைபாடுகள் உடைய கருப்பு நிற பார்பி பொம்மையையும் அமெரிக்காவின் மேட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    பார்வையற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளை மற்றும் தேசிய டவுன் சிண்ட்ரோம் சொசைட்டி உடன் இணைந்து இந்த பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

    • Inside Out 2, வெளியான 19 நாட்களில் ரூ.12,000 கோடி வசூல் செய்துள்ளது.
    • Inside Out 2 மட்டும்தான் இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம்

    பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 19 நாட்களில் 1.462 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி) வசூலை சாதனை படைத்துள்ளது.

    இதன்மூலம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு வெளியான Frozen 2 திரைப்படம் 1.45 பில்லியன் டாலர் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை Inside Out 2 முறியடித்துள்ளது.

    இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம் என்ற சாதனையையும் Inside Out 2 படைத்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×