search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hinduism"

    • இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல.
    • உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்?

    புதுடெல்லி:

    இந்துத்துவா தொடர்பான விவகாரங்களை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல எனக்கூறி இந்த மனுவை ஏற்க முடியாது என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்? என்று கேள்வி எழுப்பினர்.

    • இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.
    • இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.

    ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.

    இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

    • திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டி கண்டனம்
    • புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணா மூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மக்கள் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை நடைபெறும் முக்கிய நிகழ்வு. மதுபானம் கொடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் குடிகாரர்களாக மதுபாட்டில் கொடுத்து திருமண வரவேற்பிற்கு வந்தவர்கள் அனைவரையும் கேவலப்படுத்தியது சட்டப்படி குற்றமாகும். மேலும் புதுவை அரசு கலால் துறை சட்டப்படி இந்த செயல் மிகவும் தவறாகும்.

    இது போன்ற மோசமான நிகழ்ச்சிகள் புதுவை மாநிலத்தில் நடக்காமல் புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார்.
    • இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மாநில பார்வையாளர் செல்வகுமார் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார். தற்போதைய அவரது பேச்சு, இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மிகவும் அநாகரீகமான பேச்சு.இதை அவர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நீலகிரி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை டெபாசிட் கூட வாங்க விட மாட்டோம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கண்டித்து போராட்டம் நடத்துவதோடு சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். எம்.பி.,யாக இருக்க கூட அவருக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ‘இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது’ என பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP
    நெல்லை :

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை வந்தார். அவர் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து குறுக்குத்துறை படித்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கி புனித நீராடி வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. உள்ளூர் மட்டும் அல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    விழாவுக்கு போலீசார் சிறந்த முறையில் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதேபோல் அரசும் படித்துறை பகுதியில் தேவையான பணிகளை செய்துள்ளது.



    மகா புஷ்கர விழாவில் சுவாமி நெல்லையப்பர் தீர்த்தவாரி நடைபெறாதது ஒன்று தான் குறைவாக இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் எழுந்தருள வேண்டும். அங்கு சுவாமி, அம்பாளுக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும். விழா முடிவடையும் நேரத்திலாவது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்த்தவாரியை நடத்த வேண்டும்.

    இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. இதற்கு சபரிமலை புரட்சியும், தாமிரபரணி எழுச்சியும் எடுத்துக்காட்டு ஆகும்.

    பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டன. நாங்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP 
    சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர் என்று மோகன் சி.லாசரஸ் வாட்ஸ்-அப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். #MohanCLazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. அதில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார்.

    இது தொடர்பாக அவர் பலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கோவை, பொள்ளாச்சி, நாசரேத், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மோகன் சி.லாசரஸ் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-



    இந்து தெய்வங்களை பற்றியோ, மதத்தை பற்றியோ நான் இழிவுப்படுத்தி பேசவில்லை. சர்ச்சைக்குரிய அந்த காட்சி எப்பொழுது பேசியது என்று அதில் கூறப்படவில்லை. பொது இடங்களில் இதுபோன்று நான் பேசியதில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய காட்சி அது. அதில் சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர். எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில் உள்ளனர். அவர்களிடம் கூட நான் தவறுதலாக பேசவில்லை. என்னிடம் ஏராளமான இந்து மதத்தினர் பிரார்த்தனைக்காக வருகின்றனர்.

    இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார். #MohanCLazarus

    ×