என் மலர்
நீங்கள் தேடியது "Charity Department"
- மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
- அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.
இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.
- தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்தி றனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும்.
- அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி திருக்கோ யிலுக்கு செலுத்தவேண்டிய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் மாற்றுத்தி றனாளி திருமணம் நேற்று நடைபெற்றது.
தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி நேற்று கும்பகோணம் தாலுக்கா, அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணப்பெண் தேவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த பிரபு என்பவருக்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோயில் துணை ஆணையர் உமாதேவி மணமக்களுக்கு பட்டுப் புத்தாடைகள், கோயில் பிரசாதங்கள் வழங்கினார்.
நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
- காலையில் நடந்த தேர்வில் 1,061 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 1,017 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நெல்லை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
காலை, மதியம் என 2 கட்டங்களாக நடந்த இந்த தேர்வுக்காக 2,100 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்களுக்காக 5 அமைவிடங்களில் 7 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று தேர்வு நடைபெற்றது.
மாநகர பகுதியில் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, திருவனந்தபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளி, பழைய பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி மற்றும் சீதபற்பநல்லூரில் உள்ள 2 கல்லூரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் இன்று காலை நடைபெற்றது.
மொத்தம் 2,078 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காலையில் நடந்த தேர்வில் 1,061 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 1,017 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதன்படி இன்றைய காலை தேர்வை 51.05 சதவீதம் பேர் எழுதி உள்ளனர். இந்த தேர்வை யொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 2 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களது மேற்பார்வையில் 8 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டது.
மேலும் இந்த தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மையத்திலும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனையொட்டி டவுன் சாப்டர் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, டி.என்.பி.எஸ்.சி. அலுவலர் நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.