search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "நிலம் மீட்பு"

  • ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
  • மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.

  நாகர்கோவில்:

  இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.

  இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

  இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.

  மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
  • தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

  பூந்தமல்லி:

  தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

  பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம் பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயா தலைமையில் செயல் அலுவலர் மாதவன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

  தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் கட்டிடத்திற்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
  • கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

  மதுராந்தகம்:

  அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சிஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளி பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் இருந்தது. இந்த நிலம் மற்றும் கட்டிடத்தினை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.

  இந்த நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன் தலைமையில் கோவில் நிலங்கள் வட்டாட்சியர் தங்கராஜ், செயல் அலுவலர் மேகவண்ணன், சரக ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ஆட்சிஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

  பின்னர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகையும் அளவை கற்களும் வைக்கப்பட்டது.

  மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.4 1/2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

  • சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
  • இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

  சங்ககிரி:

  சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

  அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

  • ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
  • கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பூந்தமல்லி:

  பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

  இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இடத்தை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.

  இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அதிகாரிகள் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பி.கோடுபட்டி பகுதியில் சென்றாயசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 70 வருடமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

  இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அறநிலைத்துறை யினர் ஏலம் விட நோட்டீஸ் அனுப்பியதை வாங்க மறுத்த ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தின் மேல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.

  பின்னர் இந்து சமய அறநிலைத்துறைக்கு நிலம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்து வந்தவர்களுக்கு மூன்று முறை காலக்கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.

  இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 5 வருடத்திற்கு 15 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முதல் ஏலம் எடுத்தவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

  இந்த நிலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தை விட்டு வெளியேறாமல் விவசாய நிலத்தில் கடலைக்காய், மஞ்சள் கால்நடைகளுக்கு தீவனபயிர் வாழைமரம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.

  மேலும் நேற்று இந்து சமய அறநிலையத் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மருத்து வத்துறையினர் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி எந்திரம் உழவு டிராக்டர் கொண்டு நிலத்தில் உள்ள பயிர்களை அழித்தனர்.

  ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  அம்மம்பாளையம் கிராமத்தில் வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டனர்.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அம்மம்பாளையம் கிராமத்தில் துரைசாமி என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இதை அறிந்த வருவாய் துறையினர், 70 சென்ட் ஏக்கர் நிலத்தினை மீட்டனர். வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு இந்த நிலத்தை மீட்டனர். மேலும் இனிமேல் ஆக்கிரமிப்பு ஏதும் செய்யக்கூடாது, என ஆக்கரமிப்பு தாரர்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

  இதில் வட்டாட்சியர் மாணிக்கம்,வருவாய் ஆய்வாளர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  ×