என் மலர்
நீங்கள் தேடியது "திருப்போரூர் கோவில்"
- ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.
- கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 240 ஏக்கர் நிலம் தனிநபர்களிடம் இருப்பதாகவும் அதனை மீட்டு கோவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர சென்னையை சேர்ந்த வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோவில் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி தாமதமானதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து 21 நாட்களுக்குள் கோவில் நிலங்களை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து நிலத்தை மீட்க வந்தனர்.
அப்போது, தற்போது நிலங்களை வைத்திருப்பவர்கள், விவசாய சங்கத்தினர், சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகம் எடுத்து வந்த அறிவிப்பு பலகைகளை உடைத்து, பேனர்களை கிழித்து வாக்குவாதம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் முன்னதாக சுமார் 40 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று கோர்ட்டை நாடி உரிய உத்தரவு வாங்கி வர நேற்று வரை கால அவகாசம் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்ததால் நிலங்களை மீட்க நேற்று இரவு அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் அருகில் திருப்போரூர்-நெம்மேலி செல்லும் சாலையில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் கார்த்திகேயன், ராஜலட்சுமி, ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோவில் ஊழியர்கள் உதவியுடன், காலை 6 மணிமுதல் ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.
இன்று காலை மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சுமார் 240 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.700 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலையில், திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், திருப்போரூர் கோவில் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பக்தர்கள் ஏராளமனோர் இதில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரத்து 639-ம், 288 கிராம் தங்கமும், 2,305 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.






