search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டும்"

    • அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை
    • ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில், மேல்புறம் ஊராட்சி ஒன்றி யம் முழுக்கோடு ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புண்ணியம் மாத்தூர்கோணம் சாலை பணிகளும், வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதறால் பட்டன்விளை ஆட்டுக்கடவு சாலை பணிகளும், ரூ.35 லட்சம் மதிப்பில் பனிச்சமூடு கிருஷ்ணன்கோவில் சாலை பணிகளும், ரூ.38 லட்சம் மதிப்பில் வெள்ளாங்கோடு, செட்டிவிளை (பள்ளி கோணம் ஆர்.சி.சர்ச் சாலை) சாலை பணிகளும், மாஞ்சாலுமூடு பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைதகம் படப்பச்சை சாலை பணிகளும், மலையடி ஊராட்சிக்குட்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கோடு சாணி சாலை பணிகளும், ரூ.24 லட்சம் மதிப்பில் உத்திரங்கோடு சண்டிப் பாறை சாலை பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சிக் குட்பட்ட செழுவன்சேரி-மஞ்சவிளை சாலை, துப்பிறமலை சாலை பணிகளும், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட காணாகும் கொடி யூர்க்கோணம் சாலை பணிகளும், விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மடிச்சல் சாட்டுமுக்கு சாலைப்ப ணிகளும், முழுக்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.6 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பல் வேறு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்கு டன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப் பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (கிராம ஊராட்சிகள்) உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.
    • உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும்.

    ஈரோடு, 

    வேளாண் உதவி இயக்குனர் மா.சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் தங்கள் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்ற கிரையன்ஸ் என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

    திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வேளாண் துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும். நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடியாக பண பரிமாற்றம் மூலம் விவசாயி வங்கி கணக்கில் வரவாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கனிமொழி எம்.பி. பேச்சு
    • ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கலைஞர் பிறந்தநாள் நிகழ்வுகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டி ருக்கிறார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசும்போது வரும் நாடாளு மன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவதுதான் கலைஞருக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    சிலர் இந்த பகுதி எல்லாம் வெற்றி பெற்று விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அக்கனவு பலிக்காது. இங்கு மீண்டும் தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு ஆய்வு நடத்தி இருக்கி றோம். தி.மு.க. மகளிர் அணியில் இன்னும் அதிகமான பெண்களை இணைக்க வேண்டும். அவர்களை செயல்பட கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தி.மு.க.வில் அரசியலை தொடங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா வழியில் வந்த தி.மு.க. அரசு தமிழ கத்தின் சுயமரியாதையை என்றும் காக்கும். தமிழகத்தின் உரிமை மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாப்பதில் தி.மு.க. அரசுக்கு நிகர் யாருமில்லை என்பது மக்களுக்கு தெரி யும். தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மூலம் வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது. எதிர் அணியினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பு கிறார்கள். அதை முறிய டிக்கும் வகையில் நாம் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துக்கூற வேண்டும். கட்சிப்பிரதிநிதிகள், தொண்டர்கள் தேர்த லுக்கான பணிகளை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதி யில் உள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநக ராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் ஜோசப் ஸ்டாலின், நசரேத் பசலி யான், தில்லை செல்வம், பாபு வினி பிரட், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் வந்த கனிமொழி எம்.பி.க்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழை களுக்கு தி.மு.க.பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பணியில் ஒரு முன் உதாரணமாக விளங்கி வரு கிறது. தமிழக கவர்னர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வரு கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துக் களை தெரிவித்து வருகிறார். இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தும் கவர்னர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மரக்கன்றுகள் நடும் முகாமில் அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் வகையில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப் பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் மாவட்டம் முழு வதும் ஊராட்சி பகுதியில் மொத்தம் 5100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    மேலும் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மூலம், கிராமப்பு றங்களை சுற்றுச்சூழல் தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருட் களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நீர் பாது காப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வது இத்திட்டத் தின் குறிக்கோள் ஆகும். முகாம்களில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாம்களில் மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாபு, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்ணைப்பாளர் ஷோபா, கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், கிறிஸ்டோபர் ராஜேஷ், ரெமோன் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
    • மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கொங்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில அமைப்பாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    முன்னதாக வட்டாரத் தலைவர் சுப்பு வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள். முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளியங்கிரி, தும்பூர் போஜான் மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் கிட்டப்பா ரெட்டி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயி சங்க துணை தலைவர் பழனி ச்சாமி, தாசில்தார் (ஓய்வு) அன்னூர் கோபால்சாமி, சண்முகம், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் நடராஜன், புளியம்பட்டி ஆசிரியை ஆனந்தி, துரை சாமி மற்றும் அனைத்து தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

    இக்கூட்டத்தில் மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்று ப்புள்ளி வைக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கும் வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தினை பயன்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.

    மேலும் மயில் மற்றும் வனவிலங்குகள் எண்ணி க்கை பெருகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இதே போல் யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும்.

    பயிர் சேதம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளை விக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதத்துக்கும் மற்றும் விளை நிலங்களில் பறவைகள் விலங்குகள் இறந்து கிடந்தாலோ விவசாயிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது.

    மேலும் இது குறித்து விவசாயிகள் மீது நட வடிக்கை எடுத்தால் விவ சாயிகளை ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து விவசாயிகள் காப்பாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் அரசியல் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு தரப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.

    மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செல்போன்களில் மூழ்கி கிடக்காதீர்கள்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

    நாகர்கோவில்:

    கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர் கல்வி வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந் தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் கலெக்டர் அரவிந்த், பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வி மற்றும் எழுத்தறிவில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வரு கிறது. அதற்கேற்ப, பள்ளி மாணவ, மாணவிகள் தங்க ளது தனி திறமைக்கேற்ப கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். பொது அறிவினை வளர்த் துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாளும் பத் திரிகைகள் மற்றும் அறி வுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன்க ளில் மூழ்கி கிடக்ககூடாது. ஒரு பாடத்தை படிக்கும் பொழுது கேள்வி, பதில் களை மட்டும் படிக்காமல் முழு பாடத்தையும் படிக்க வேண்டும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டும். எளிதாக புரிந்து கொண்டு அதிக மதிப்பெண் பெறக்கூடிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றிபெறலாம். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு ஏதா வது ஒரு பட்டப்படிப்பு போதும். ஐஏஎஸ் படிப்பில் 27 வகையான மத்திய அரசு பணிகள் உள்ளன. அதற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் சட்ட கல்வி பயில நிறைய வாய்ப்புகள் உள்ளது. மத் திய பல்கலைக்கழகங்களில் படிக்க நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சேர வேண்டுமானால் 12-ம் வகுப் பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மருத்துவ படிப்பு மட்டுமல்லாமல் அதற்கு நிகரான துறையை யும் தேர்ந்தெடுத்து படிக்க லாம். டிபார்ம், பல் மருத்து வம்போன்ற படிப்புகளையும் படிக்கலாம். கால்நடை மருத் துவம், விவசாயம், பொறியி யல் படிப்பு (தமிழ் வழியில்) படித்து வேலை வாய்ப்பை பெற முடியும்.

    பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உங் களை உயர்வான நிலைக்கு கொண்டு வர கஷ்டப்படுகி றார்கள். அவர்களின் கஷ் டங்களை, எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பழக்க வழக் கங்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் உயரிய இலக்கை எட்டும் நோக்கில் 12-ம் வகுப்பு தேர்வில் கவன சிதைவின்றி தன்னம்பிக்கை யுடனும், விடா முயற்சியுட னும், கடின உழைப்புடனும் தேர்வினை எதிர்கொண்டு வாழ்வில் ஏற்றம்பெறவேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கொட்டாரம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதீபா மற்றும் ஆசிரியர் கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

    இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் காளிங்கராயன் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த சில மாத ங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் ரோட்டோரம் இருந்த ஒரு சில மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.இதேபோல் காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வெட்ட ப்பட்ட ஒரு மரத்தின் வேர் பகுதியை அப்புறப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதாக கூறப்படு கிறது.

    இதனால் வேர் உள்ள இடத்தில் மீண்டும் மரம் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ரோடு சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே மரத்தின் வேரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

    மேலும் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ரோட்டோரங்களில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ள னர்.

    • இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும்.
    • இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் நேரம் காப்பாளர் நியமிக்க வேண்டும்.

    சேலம்:

    மல்லூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து அலுவலர் , தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி பேசியதாவது-

    அனைத்து பஸ்களையும் மல்லூர் வழியாக இயக்க வேண்டும், இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. டிரைவர், கண்டக்டர்கள் பெண்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு காமிரா பெருத்த வேண்டும் என்றார்.

    சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் பேசுகையில், மல்லூர் பஸ் டாப்பில் பஸ் பெயர், மல்லூர் வந்து செல்லும் நேரம் ஆகியவை அடங்கிய கால அட்டவனை வைக்க வேண்டும், நேர காப்பாளர் நியமிக்க வேண்டும், மல்லூர் ஊருக்குள் வரும் பஸ்களின் க ண்டக்டர்கள் அங்குள்ள நோட்டில் கையெழுத்திட வேண்டும் என்றார். அப்போது டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் வேங்கை எம். அய்யனார், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் கலை வாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, மற்றும் தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கத்தினர் உள்பட ப லர் பங்கேற்றனர்.

    • அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எ.கேசவன் தலைமை தாங்கினார்.

    அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி என்கிற கே.என் வெங்கடாசலம், பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம் மாவட்ட வழக்கறிஞர் தலைவர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி என்கிற ரத்தினம், மாவட்டத் தலைவர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் மற்றும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஒருசில காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கிட மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் மேட்டூர், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலையில் அப்பகுதியில் பெண் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மொபைல் கழிவறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.முருகேசன்,ரவிச்சந்திரன்,சண்முகசுந்தரம் நாச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×