search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் மூலம்"

    • இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி நடந்தது.
    • இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா (வயது 33). இவர் அதே பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது நிறுவனத்தில், ஆன்லைன் மூலமும் சேலை கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ப வரின் மகள் உமா மகேஸ்வரி வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆன்லைன் மூலம் சுபா மற்றும் இவரது கணவரின் சகோதரர் அருண் என்பவர் கடைகளில் இருந்து விற்ற சேலைகளின் பணம் ரூ.30 லட்சத்தை உமா மகேஸ்வரி தனது சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிலும், மும்பையில் உள்ள நண்பர் உமா பிள்ளை என்பவரது கூகுள் பே கணக்கிலும் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுபா சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இன்று காலை உமா மகேஸ்வரி, மாணிக்கம், உமா பிள்ளை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.
    • உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும்.

    ஈரோடு, 

    வேளாண் உதவி இயக்குனர் மா.சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் தங்கள் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்ற கிரையன்ஸ் என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

    திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வேளாண் துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும். நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடியாக பண பரிமாற்றம் மூலம் விவசாயி வங்கி கணக்கில் வரவாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.
    • 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. இந்த 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1830 இடங்களுக்கு நடப்பாண்டு 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மாணவர் சேர்க்கை கையேடு ஆகியவை www.scert.tn.schools.gov.in என்ற இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2,300 இடங்கள்

    அதே சமயம் கடந்த ஆண்டு 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை செய்த நிறுவனங்களை தவிர்த்து, 33 உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,300 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செய்ய தகுதியுள்ளது. வருகிற 5-ந்தேதி இந்த நிறுவனங்களின் இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவுறுத் தியுள்ளார்.

    • வேளாண் அடுக்கு திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் விவசாயிகள் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி, விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று 'GRAINS' என்ற இணை யத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இத்தளத்தில் விவசாயிகளின் விபரம் இணைக்கப்படுவதால் வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, தோட்டக்க லை துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல் துறை, ஊரக வள்ர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

    தவிர நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவாகும். தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து தொடர்ந்து பலன்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்த ரேவதி. இவர் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையத்தை சேர்ந்த நிறுவனத்திடம் கடந்த மார்ச் மாதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து 11.45 டன் வெங்காயம் வாங்கி உள்ளார்.

    ரூ.2.17 லட்சம் மதிப்பி லான வெங்காயத்தை வாங்கி விட்டு பல மாதங்களாக பணத்தை தராமல் ரேவதி காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஏமாற்ற மடைத்த திருப்பூர் நிறுவன உரிமையாளர் பாசல் அகமது பல முறை முயன்றும் பணத்தை பெற முடியாத நிலையில் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரேவதி தலைமறைவானார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனில் வாங்கிய வெங்கா யத்தை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வேறொரு வியாபாரிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் பலரிடம் தன்னை வியாபாரி என அறிமுகம் செய்து இதுபோல் மொத்தமாக பொருட்களை வாங்கி கிடைத்த விலைக்கு விற்பனை செய்து பணத்தை செலவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தமாக இதுபோல் பல பேரிடம் சுமார் ரூ.12 லட்சம் அளவிற்கு மோசடி செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளூக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். மேலும், www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளது.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண் 110-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×