search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling sarees online"

    • இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி நடந்தது.
    • இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா (வயது 33). இவர் அதே பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது நிறுவனத்தில், ஆன்லைன் மூலமும் சேலை கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ப வரின் மகள் உமா மகேஸ்வரி வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆன்லைன் மூலம் சுபா மற்றும் இவரது கணவரின் சகோதரர் அருண் என்பவர் கடைகளில் இருந்து விற்ற சேலைகளின் பணம் ரூ.30 லட்சத்தை உமா மகேஸ்வரி தனது சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிலும், மும்பையில் உள்ள நண்பர் உமா பிள்ளை என்பவரது கூகுள் பே கணக்கிலும் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுபா சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இன்று காலை உமா மகேஸ்வரி, மாணிக்கம், உமா பிள்ளை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×