search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman arrested for"

    • காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
    • 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பெருந்துறை போலீசார் மேட்டுப்புதூர்-கள்ளியம்புதூர் சாலை பிரிவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.அப்போது அவ்வழியாக 2 கார்கள் வந்தன. போலீசாரை கண்டதும் காரில் இருந்த வர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் வந்தவர்கள் பெருந்துறை மடத்துபாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(31), கொங்கு நகர் தாஷ்கண்ட் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (31) ஆகியோர் என்பதும், பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் பெங்களூருவில் இருந்து கார்கள் மூலம் தினேஷ் குமார் வீட்டுக்கு புகையிலைப் பொருட்களை அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் தினேஷ்குமார் வீட்டுக்கு விரைந்து சென்ற னர். போலீசாரை பார்த்த தும் அங்கிருந்த அவரது தாயார் சிவகாமி (52) என்ப வர் தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போது அங்கும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் சிவகாமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட சிவகாமி யின் மகன் தினேஷ் குமார் மற்றும் ராஜ்குமார், லட்சு மணன் ஆகியோரை போலீ சார் வலைவீசி தேடி வருகி ன்றனர். இவர்கள் பிடிபட்டால் தான் இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் வேறு யார் உள்ளார்கள் என தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தாளவாடி போலீசார் சாந்தி என்பவரை கைது செய்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த கல் மண்டிபுரம், சோழகர் தொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது அங்கு 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இது குறித்து தாளவாடி போலீசார் சாந்தி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.
    • அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கு மூட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து அவர் வைத்து இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பழைய தபால் ஆபிஸ் வீதியை சேர்ந்த வசந்தி (வயது 53) என தெரிய வந்தது.

    மேலும் அவர் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி கர்நாடகா மாநிலம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பு வதற்காக பஸ்சுக்காக காத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 7 மூட்டைகளில் சுமார் 100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப்பபட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகா ப்பு மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர்.
    • மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குளி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப்பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த முத்தம்மாள் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்த ரேவதி. இவர் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையத்தை சேர்ந்த நிறுவனத்திடம் கடந்த மார்ச் மாதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து 11.45 டன் வெங்காயம் வாங்கி உள்ளார்.

    ரூ.2.17 லட்சம் மதிப்பி லான வெங்காயத்தை வாங்கி விட்டு பல மாதங்களாக பணத்தை தராமல் ரேவதி காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஏமாற்ற மடைத்த திருப்பூர் நிறுவன உரிமையாளர் பாசல் அகமது பல முறை முயன்றும் பணத்தை பெற முடியாத நிலையில் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரேவதி தலைமறைவானார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனில் வாங்கிய வெங்கா யத்தை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வேறொரு வியாபாரிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் பலரிடம் தன்னை வியாபாரி என அறிமுகம் செய்து இதுபோல் மொத்தமாக பொருட்களை வாங்கி கிடைத்த விலைக்கு விற்பனை செய்து பணத்தை செலவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தமாக இதுபோல் பல பேரிடம் சுமார் ரூ.12 லட்சம் அளவிற்கு மோசடி செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×