வீட்டில் கஞ்சா விற்ற பெண் கைது

வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தாளவாடி போலீசார் சாந்தி என்பவரை கைது செய்தனர்.
வீட்டில் கஞ்சா விற்ற பெண் கைது
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தாளவாடி அடுத்த கல் மண்டிபுரம், சோழகர் தொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது அங்கு 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இது குறித்து தாளவாடி போலீசார் சாந்தி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com