ரேசன் அரிசி கடத்திய பெண் கைது

சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
ரேசன் அரிசி மூட்டைகளுடன் சிக்கிய பெண்ணை படத்தில் காணலாம்.
ரேசன் அரிசி மூட்டைகளுடன் சிக்கிய பெண்ணை படத்தில் காணலாம்.
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கு மூட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து அவர் வைத்து இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பழைய தபால் ஆபிஸ் வீதியை சேர்ந்த வசந்தி (வயது 53) என தெரிய வந்தது.

மேலும் அவர் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி கர்நாடகா மாநிலம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பு வதற்காக பஸ்சுக்காக காத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 7 மூட்டைகளில் சுமார் 100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப்பபட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகா ப்பு மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com