search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 tons of onion online"

    • சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்த ரேவதி. இவர் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையத்தை சேர்ந்த நிறுவனத்திடம் கடந்த மார்ச் மாதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து 11.45 டன் வெங்காயம் வாங்கி உள்ளார்.

    ரூ.2.17 லட்சம் மதிப்பி லான வெங்காயத்தை வாங்கி விட்டு பல மாதங்களாக பணத்தை தராமல் ரேவதி காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஏமாற்ற மடைத்த திருப்பூர் நிறுவன உரிமையாளர் பாசல் அகமது பல முறை முயன்றும் பணத்தை பெற முடியாத நிலையில் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரேவதி தலைமறைவானார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனில் வாங்கிய வெங்கா யத்தை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வேறொரு வியாபாரிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் பலரிடம் தன்னை வியாபாரி என அறிமுகம் செய்து இதுபோல் மொத்தமாக பொருட்களை வாங்கி கிடைத்த விலைக்கு விற்பனை செய்து பணத்தை செலவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தமாக இதுபோல் பல பேரிடம் சுமார் ரூ.12 லட்சம் அளவிற்கு மோசடி செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×