search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னெடுப்பு"

    மரக்கன்றுகள் நடும் முகாமில் அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் வகையில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப் பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் மாவட்டம் முழு வதும் ஊராட்சி பகுதியில் மொத்தம் 5100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    மேலும் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மூலம், கிராமப்பு றங்களை சுற்றுச்சூழல் தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருட் களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நீர் பாது காப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வது இத்திட்டத் தின் குறிக்கோள் ஆகும். முகாம்களில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாம்களில் மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாபு, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்ணைப்பாளர் ஷோபா, கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், கிறிஸ்டோபர் ராஜேஷ், ரெமோன் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரிய குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை நவீன இயந்திரம் மூலம் அரவை செய்து உரமாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • பெரிய குளத்தின் கரைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    மாநகராட்சிக்குட்பட்ட சுசீந்திரம் பெரிய குளத்தை மறுசீராக்கம் மேற்கொள்ளும் பணியினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    கலெக்டர் அரவிந்த் தலைமையில், மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறு கையில்:

    கன்னியாகுமரி மாவட்ட த்தினை முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றிடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள் வாயிலாக பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் பகுதியிலுள்ள பெரிய குளத்தில் பட ர்ந்துள்ள ஆகாய தாமரை செடி மற்றும் அதன் கொடிகளை முழுமையாக அகற்றி குளத்தினை தூய்மை ப்படுத்துவதோடு குளத்தில் இருந்து அகற்றப்பட்ட ஆகாய தாமரை களை நவீன இயந்திரம் மூலம் அரவை செய்து உரமாக்குவதற்காக முயற்சியும் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.

    மேலும் பெரிய குளத்தின் கரைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை உலக சுற்றுசூழல் தினத்தன்று துவக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூர் வாரும் பணியினை சுற்றுசூழல் ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளார்கள்.

    இப்பணிகளை 5 மாதத்திற்குள் துரிதமாக முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர்இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×