search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரை"

    • இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
    • இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்து சரி செய்யும் பணிகள் மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீரோடி முதல் ராஜாக்கமங்க லம் வரை உள்ள மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, கட லுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இது போன்ற எல்லா விதமான ஆவணங்களை சரிசெய் பார்த்து அவர்கள் அதற்கான ஒப்புதல் செய்கின்றனர்.

    இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களுக்கு மட்டும் தான் 100 லிட்டர் மண்எண்ணை மானியத்தில் வழங்கப்படு கிறது. கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்றவற்றிற்கு இது ஒரு முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×