search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வோலை"

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ×