search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
    X

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

    • தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
    • மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கொங்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில அமைப்பாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    முன்னதாக வட்டாரத் தலைவர் சுப்பு வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள். முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளியங்கிரி, தும்பூர் போஜான் மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் கிட்டப்பா ரெட்டி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயி சங்க துணை தலைவர் பழனி ச்சாமி, தாசில்தார் (ஓய்வு) அன்னூர் கோபால்சாமி, சண்முகம், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் நடராஜன், புளியம்பட்டி ஆசிரியை ஆனந்தி, துரை சாமி மற்றும் அனைத்து தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

    இக்கூட்டத்தில் மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்று ப்புள்ளி வைக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கும் வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தினை பயன்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.

    மேலும் மயில் மற்றும் வனவிலங்குகள் எண்ணி க்கை பெருகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இதே போல் யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும்.

    பயிர் சேதம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளை விக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதத்துக்கும் மற்றும் விளை நிலங்களில் பறவைகள் விலங்குகள் இறந்து கிடந்தாலோ விவசாயிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது.

    மேலும் இது குறித்து விவசாயிகள் மீது நட வடிக்கை எடுத்தால் விவ சாயிகளை ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து விவசாயிகள் காப்பாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் அரசியல் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு தரப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×