தோனி மடுவு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்

அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தோனி மடுவு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்
Published on

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எ.கேசவன் தலைமை தாங்கினார்.

அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி என்கிற கே.என் வெங்கடாசலம், பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம் மாவட்ட வழக்கறிஞர் தலைவர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி என்கிற ரத்தினம், மாவட்டத் தலைவர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் மற்றும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஒருசில காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கிட மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் மேட்டூர், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலையில் அப்பகுதியில் பெண் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மொபைல் கழிவறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.முருகேசன்,ரவிச்சந்திரன்,சண்முகசுந்தரம் நாச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com