search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம்"

    • தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது.
    • உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின்சார நிலை கட்டண உயர்வு, மற்றும் பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த்,கோபிபழனியப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது : -

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பை பெற்று தொழில் செய்து வருகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் எங்களிடம் இல்லை.

    இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    அரசின் கவனத்தை ஈர்க்க இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டு பேசினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்தார்
    • தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு,

    ஈரோடு மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தற்போது 60 சதவீதம் மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புகார் குறை, புது இணைப்பு விண்ணப்பித்தலும் ஆன்லைனில் பதிவு செய்வதால் விரைவாக பரிசீலனை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி .ஆர் .குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில கழக துணை செயலாளர் அக்பர், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் பொன் இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் திருப்பூர் மாவட்ட தேமுதிக.வை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி அளவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால் தள்ளாடி வருகிறது.

    அதிலும் கூடுதலாக வர்த்தக நிறுவனங்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலான பீக் ஹவர் என சொல்லப்படும் இந்த நேரங்களில் மேலும் அபரிமிதமான கட்டணத்தை உயர்த்தி தொழில் துறையினரையும் தொழிலாளர்களையும் வேதனை அடைய செய்திருக்கிறது.

    இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. ஆகவே தமிழக அரசு இந்த பீக் ஹவர் மின் கட்டண உயர்வு என்பதை வாபஸ் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    தமிழகத்தில் தேர்தல் காலத்தில் திமுக., சார்பில் அனைத்து மகளிருக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆட்சியையும் பிடித்தது .ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு தற்போது விண்ணப்பங்களும் வழங்கி வருகின்றனர்.அதிலும் குளறுபடி நீடிக்கிறது .இதை தமிழக அரசு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளறுபடிகளை களைந்து அனைத்து மகளிருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை ரூ.1000த்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தேமுதிக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது.
    • நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்து மேலும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.24-

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக திறப்பு விழாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா வந்திருந்தார். விழாவில், அனைத்து பனியன் தொழில் அமைப்புகள் சார்பில் பொது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    தொழில் அமைப்பினர் அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:-

    இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நூல்விலை அபரிமிதமாக உயர்ந்ததால், பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டது.

    வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியவில்லை. பின்னலாடை உற்பத்தி மட்டுமல்லாது, நிட்டிங், சாயத்தொழில், காம்பாக்டிங், ரைசிங் போன்ற சார்புடைய தொழில்களும் பாதித்தன.திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் 75 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

    சங்கிலி தொடர் போன்ற ஜாப் ஒர்க் சேவை கிடைத்தால் மட்டுமே தரமான ஆடைகளை தயாரிக்க முடியும். திருப்பூர் ஆடைத் தொழிலின் நிலைமை மாறுபட்டுள்ளதால் தேவையான உள்கட்டமைப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும்.

    ரஷ்யா - -உக்ரைன் போர் காரணமாக ஜவுளி உற்பத்தி நடவடிக்கை மந்தமாகி விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இக்கட்டான இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    தொழில்நிலை மந்தமாக இருக்கும் போது மின்கட்டணம் உயர்ந்தது ஸ்தம்பிக்க செய்துள்ளது. நிலை கட்டண உயர்வும், பீக் ஹவர் கட்டணமும், தொழிலை சரிவு நிலைக்கு தள்ளிவிடும். மின்சாரத்தை பயன்படுத்தாத நேரத்திலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைத்து தொழில் சீராக இயங்க உதவிட வேண்டும். தமிழக அரசு கோரிக்கையை பரிசீலித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    விசைத்தறிகள்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி அனைத்து வகை மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதில் விசைத்தறிகளுக்கு 3ஏ-2 பிரிவின் கீழ் யூனிட்டுக்கு 4.50 ரூபாயில் இருந்து 6.40 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த விசைத்தறியாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவரை மின்கட்டணம் செலுத்தப்போவதில்லை எனக்கூறி பல கட்ட போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுடன் விசைத்தறியாளர் சங்கத்தினர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக கடந்த மார்ச் 3-ந்தேதி மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 1.10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் விசைத்தறி யாளர்கள், மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக மாநில முதல்வருக்கு மனு வழங்கி வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக மனு ஒன்றையும் அச்சடித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் போக, அனைத்து சிலாப்களுக்கும் யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டண பயன்பாடு அடிப்படையில் 70 பைசாவில் இருந்து 1.40 ரூபாய் வரை யூனிட்டுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் கடந்த மார்ச் முதல் தேதி வரை கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து சிலாப்களுக்கும், யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த வேண்டும். நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். நிலுவை மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.
    • மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    கோவையில் அமைச்சர் முத்துசாமியை விசைத்தறியாளர்கள் சந்தித்து, மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும். தற்பொழுது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்து மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தனர்.

    விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் மின்துறை அமைச்சர், மின்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
    • விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலுள்ள சுமார் 7000 திருமண மண்டபங்களுக்கு தொடர்ச்சியாக சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிம கட்டணம் என்று அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    கொரோனா கால நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் திருமண மண்டபங்கள் இவ்வாறான வரிகளால் திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை பராமரிக்க முடியாமல், வங்கி கடனை செலுத்த முடியாமலும் மண்டபங்களை மூடும் தருவாய்க்கு வந்துவிட்டார்கள். இந்த விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டால் திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபடும் கேட்டரிங், நடேஸ்வரன், புகைப்படம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, மற்றும் கோவை மாவட்டம் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மில்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 1500 டன் நூல் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்களில் மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூல் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.இந்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மில்களில் வேலை பார்த்து வரும் சுமார் ஐந்து ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நூல்மில் உரிமையாளர்கள் கூறுகையில்:-

    மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 50 சதவீதம் நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மின்கட்டணம் உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசு மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    • ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 102 ரூபாயாகவும் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.
    • கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1-7-2023 முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது போல் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் பொதுச் சேவை பயன்பாட்டிற்கான ஒரு யூனிட் கட்டணம் 8 ரூபாயில் இருந்து 8 ரூபாய் 15 காசாகவும், ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 102 ரூபாயாகவும் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக, பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கூடுதல் கட்டணத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள், குறிப்பாக வாடகைக்கு குடியிருப்போர் ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். வீடுகளில் உபயோகிக்கப்படும் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதும், வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வீட்டு பொதுச் சேவை பயன்பாட்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.

    வீட்டு நுகர்வோர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, வீட்டு நுகர்வோருக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணத்தை குடியிருப்புகளுக்கான பொதுச் சேவை பிரிவிற்கு வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் கட்டணத்தை கணக்கெடுக்கிறார்கள்.
    • மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 மின் கட்டணம் ஆகும். 401 முதல் 500 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6-ம், 501 முதல் 600 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், 601 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9-ம், 801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10-ம், 1001-க்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் கட்டணத்தை கணக்கெடுக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக சென்னையில் பல இடங்களில் மின்கட்டண கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தங்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    ஒவ்வொரு முறை மின் பயனீட்டு அளவை 5 முதல் 8 நாட்கள் வரை தாமதமாக கணக்கெடுப்பதால் ரூ.300 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. குறிப்பாக ஒரு வீட்டில் 2 மாதத்துக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நிலையில் தாமதமாக கணக்கெடுக்க செல்லும் நிலையில் கூடுதலாக 10 முதல் 20 யூனிட் வரை பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக 500 யூனிட்டை தாண்டி மின் அளவு சென்று விடுவதால் அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

    தமிழக அரசு மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

    எனவே மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும். அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாமதமாகவே மின் கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் கட்டணம் தாமதமாக கணக்கெடுக்கப்படுகிறது. தாமதம் ஏற்படும் இடங்களில் 2 மாதங்களுக்கான சராசரி எடுத்து, அதில் காலதாமதமான நாட்களை கழித்தே மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது' என்றார்.

    • “நேரத்திற்கு ஏற்ற கட்டணம்” மற்றும் “ஸ்மார்ட் மீட்டர்” ஆகியவை குறித்து மின்சார நுகர்வோர் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு உள்ளது.
    • தேவையான நடவடிக்கையினை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "நேரத்திற்கு ஏற்ற கட்டணம்" மற்றும் "ஸ்மார்ட் மீட்டர்" ஆகியவை குறித்து மின்சார நுகர்வோர் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு உள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாததைப் பார்க்கும்போது, இதற்கு தி.மு.க. அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை, மக்களவை பொதுத்தேர்தல் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு ஏற்கனவே ஏமாற்றியதுபோல் மறுபடியும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் தி.மு.க. இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    மேற்படி திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டுமென்றும், "முளையிலே கிள்ளி எறி" என்ற பழமொழிக்கேற்ப, இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையினை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
    • கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டம் மற்றும் அதன் அடிப்படையிலான மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட முதல்கட்டமாக, 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின்பயன்பாட்டு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

    இத்தகைய சூழலில் 70 சதவீதம் மின்சாரப் பயன்பாட்டுக்கு மறைமுக கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவது ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்தி விடும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப 25 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • கட்டண விவரம் குறுந்தகவல் மூலம் செல்போனில் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

    சென்னை:

    நாடு முழுவதும், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது.

    எனவே இந்த நேரங்களில் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்த நிறுவனங்களுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்வது மின்சார வாரியத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.

    எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் கட்டண விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்காக மத்திய மின்துறை அமைச்சகம், மின்சார நுகர்வோர் உரிமை விதிமுறைகளில் 2 திருத்தங்களை செய்து உள்ளது.

    அதில் ஒன்று, நேரத்திற்கு ஏற்ற மின் கட்டண பட்டியல், மற்றொன்று 'ஸ்மார்ட் மீட்டர்' விதிமுறைகளை எளிமையாக்குதல் ஆகும். இந்த 2 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மத்திய மின் துறை மந்திரி ராஜ்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின் கட்டணத்தை கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திய பிறகு விவசாயத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் தவிர மற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் நேரத்திற்கு ஏற்ற மின்சார கட்டணத்தை அமல்படுத்துவதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி 10 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட தேவை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப 25 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    10 கிலோ வாட்டுக்கு குறைவான மின் தேவை கொண்டவர்களுக்கும், வீடுகளுக்கும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

    இந்த புதிய விதிமுறையின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கும். அதே நேரத்தில் மற்ற நேரங்களில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் குறைவாக இருக்கும்.

    அதிக மின் பயன்பாட்டு நேரங்கள் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டு நேரத்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது வெளியிடப்படும். இதன்படி பொதுமக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி கூடுதல் செலவை தவிர்க்க முடியும். குறைவான மின் கட்டணம் உள்ள நேரத்தில் வாஷிங்மிஷின் உள்ளிட்ட மின்சார கருவிகளை பயன்படுத்தி கட்டணத்தை சேமிக்க முடியும்.

    இந்த புதிய நடைமுறை நுகர்வோர் மற்றும் மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும்போது மின்சாரத்தை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எளிமையாக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின்சார பயன்பாடு அளவு குறித்து கணக்கெடுக்க வேண்டியதில்லை. ஸ்மார்ட் மீட்டரில் உள்ள மென்பொருள் மூலம் மின் பயன்பாட்டை அந்த மீட்டர் தானாகவே கணக்கெடுத்து விடும். கட்டண விவரம் குறுந்தகவல் மூலம் செல்போனில் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

    தினமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பதையும், கட்டணம் எவ்வளவு என்பதையும் பொதுமக்கள் மீட்டரிலேயே பார்க்க முடியும். இதில் தற்போதுள்ள பிரச்சினைகளை சரி செய்து எளிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×