search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணம், கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நெருக்கடி- கோவை, திருப்பூரில் நூல்மில்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
    X

    மின் கட்டணம், கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நெருக்கடி- கோவை, திருப்பூரில் நூல்மில்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

    • கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, மற்றும் கோவை மாவட்டம் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மில்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 1500 டன் நூல் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்களில் மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூல் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.இந்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மில்களில் வேலை பார்த்து வரும் சுமார் ஐந்து ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நூல்மில் உரிமையாளர்கள் கூறுகையில்:-

    மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 50 சதவீதம் நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மின்கட்டணம் உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசு மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×