மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி அமைச்சர் முத்துசாமியிடம் விசைத்தறியாளர்கள் மனு

மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.
அமைச்சரிடம் மனு அளித்தபோது எடுத்த படம்.
அமைச்சரிடம் மனு அளித்தபோது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

கோவையில் அமைச்சர் முத்துசாமியை விசைத்தறியாளர்கள் சந்தித்து, மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும். தற்பொழுது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்து மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தனர்.

விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் மின்துறை அமைச்சர், மின்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com