மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தொழில் துறையினர் போராட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின்சார நிலை கட்டண உயர்வு, மற்றும் பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த்,கோபிபழனியப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது : -

தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பை பெற்று தொழில் செய்து வருகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் எங்களிடம் இல்லை.

இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அரசின் கவனத்தை ஈர்க்க இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டு பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com