search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள்"

    • கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர்மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு தெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

    சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

    சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மேலாண்இயக்குனர் கூற அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • ரூ.65 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.65,000 மதிப்பிட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் செய்த வேலைக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத தையும் கண்டித்தும், பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு ஒன்றிய கவுரவ தலைவர் பெத்தபெருமாள் ஒன்றிய சங்க தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி துணை செயலாளர் காந்தி, சங்க மாவட்ட தலைவர் சாந்தகு மார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.31.28 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதார குளியலறை, கழிவறை கட்டப்பட்டன.
    • தூய்மை பணியாளர் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10 கும்பகோணத்தார் தெரு வடவாற்றங்கரையில் தஞ்சை மாநகராட்சி, தூய்மை பாரத இயக்கம் 2.00 திட்டம் சார்பில் ரூ.31.28 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதாரப் பொது குளியலறை, கழிவறை கட்டப்பட்டன. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு பகுதி 1 மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு நவீன சுகாதார பொது குளியலறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கழிவறையை மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர் ஆட்சி பொன்னு என்பவரை கொண்டு திறந்து வைக்க செய்தார். மேயரின் இந்த செயலால் அந்த தூய்மை பணியாளர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்து பாராட்டினர்.

    இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
    • அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சம்பளம் தரவில்லை என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இது குறித்து நேற்று அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களையும், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மகளிர் சுய உதவி குழு மூலம் துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் தூய்மை பணியாளர்கள் அனைவருமே சம்பள பாக்கி எதுவும் இல்லை. சம்பள தொகை வங்கிக் கணக்கில் கடந்த 5-ந் தேதி வந்துவிட்டது என தெரிவித்தனர்.

    இதனால் பணியாளர்க ளுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என சம்பள பாக்கி உள்ளதாக வாட்ஸ் அப் குழுவில் வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு விடம் கேட்டபோது:-

    வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சம்பள பாக்கி என வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் . அது முற்றிலும் தவறான தகவல். தூய்மை பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பள பாக்கி நிலுவையில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

    தர்ணா போராட்டம்

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும்

    மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகை யில், எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.720 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.320 என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்குகின்றனர்.

    மேலும் விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

    எங்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். பி.எப். பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து வருகை தந்த டாக்டர்கள், செவிலியர்கள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை என உடல் முழு பரிசோதனை செய்தனர்.

    இம்முகாமில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாகிராஅம்மாள் அப்துல்கரீம், நகர் மன்ற துணைத் தலைவர் ராமகுணசேகரன், ஆணையர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

    திருவாரூர்:  

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய சுமை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காகாபாளையம்:

    சேலம் இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.

    ஒப்பந்த தொழிலாளர்

    இந்த பகுதியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    மறியல்

    இந்த நிலையில், தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, முதலுதவி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் வடகிழக்கு பருவமழை கால படகு மற்றும் பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது . திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புப் பணிகள் குறித்து காவிரி ஆற்றில் இறங்கி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.நீரில் மூழ்கிய வர்களைகாப்பாற்றுவது முதலுதவி செய்வது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் பொதுமக்கள்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும்.
    • தினக்கூலியை ரூ.550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தூய்மை பணியாளர்களை புதிதாக டெண்டர் எடுத்த நிறுவனம் அல்லது முகமை யார் என்பதை அறிவிக்க வேண்டும்.

    ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும்.

    தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சார்பில் தினக்கூலியை ரூ.550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையை உடனே வழங்கிட வேண்டும்.

    மாநகர தூய்மை பணியா ளர்கள் நலச்சங்கத்திற்கு தெரிவிக்காமல் புதிய தூய்மை பணியாளர்களை நியமிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து போலீசார், தூய்மை பணியாளர் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொ ண்டனா். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×