என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
- கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர்மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு தெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மேலாண்இயக்குனர் கூற அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






