search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
    X

    நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். 

    நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

    தர்ணா போராட்டம்

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும்

    மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகை யில், எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.720 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.320 என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்குகின்றனர்.

    மேலும் விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

    எங்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். பி.எப். பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×