என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க கூட்டம்
- துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய சுமை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






