search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார்சாலை"

    • தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட வேலன் நகர், தீபா நகர், திருகுமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.84.90 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.விழாவில் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாதன் கலந்துகொண்டு புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
    • இரவு முழுவதும் எம்.எல்.ஏ. கண்காணித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி-வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தபணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று இரவு முழுவதும் அங்கிருந்து கண்காணித்தார். இதைத்தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வழக்கம் போல் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
    • பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் பழமையான பூனைகுத்தி காட்டாற்று பாலம் உள்ளது. மழை காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    இதனால் அங்கு உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து அங்கு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

    அந்த மாற்றுப்பாதை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த மாற்றுப்பாதை ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, உடனடியாக அந்த பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 2-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.

    இதன் எதிரொலியாக தற்போது அந்த பழுதடைந்த சாலையில் தார்சாலை போடப்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் தார்சாலை அமைத்து தந்த அதிகாரிகளை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாய் பாராட்டினர்.

    • சிவகங்கை நகராட்சியில் ரூ.98 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஆய்வு செய்தார்.
    • பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியின் சார்பில் நகரின் மையப்பகு தியான அரண்மனை வாசலில் இருந்து வாரச் சந்தை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற தாக இருந்து வந்தது. அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். 2 மற்றும் 3-வது வார்டு சி.பி.காலனி உள்ளிட்ட பகுதி களில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சியில் நகர மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை நகராட்சியை ஒரு முன்மாதிரி நகராட்சி யாக உருவாக்கிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வின்போது சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், ஆணையா ளர் (பொறுப்பு) பாண்டீஸ் வரி, நகர இளைஞர் அணி அமைப்பாளரும், மன்ற உறுப்பினருமான அயூப் கான், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயகாந்தன், வீரக்காளை, நகர துணை செயலாளர்கள் வீனஸ் ராமநாதன், ஆறு.சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர் ராஜா அமுதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
    • நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.

    நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றை அர சுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சாலை சம்பந்தமாக ஒவ்வொரு நகரமன்ற கூட்டத்திலும் பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இதன் பொருட்டு சென்னை நகராட்சி இயக்குனர் அலுவ லகம் சென்ற, குமாரபா ளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், அம்மன் நகர் சாலை அமைக்கவும், பல வளர்ச்சித்திட்ட பணி கள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையாவிடம் மனு கொடுத்தார்.

    இந்த மனு தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பொன்னையா கூறியுள்ளார். அப்போது கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

    • 11 பணிகள் 34.99கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 6 பணிகள் ரூ.15.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சியில் நபார்டு மற்றும் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் தார்சாலை தரம் உயர்த்துதல் பணியி னை செய்தித்துறை அமை ச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத் தலைமை யில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் தற்போது 11 பணிகள் 34.99கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 6 பணிகள் ரூ.15.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்ப ட்டுள்ளது.வெள்ளகோவில் ஊராட்சிஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி,இலுப்பை கிணற்றில் நபார்டு மற்றும் சாலை மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் ரூ.1.62கோடி மதிப்பீட்டில் என்.ஜி.எம்., சாலை முதல் இலு ப்பைகிணறுவரை தார்சாலைதரம் உயர்த்துதல் பணி தொடங்கி வைக்கப்ப ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் கணபதிபாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.35 லட்சம் மதிப்பீட்டில் மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், நிர்மலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது.
    • ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது சிவசக்தி நகர். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இப்பகுதியில் தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபுவுக்கு உடனடியாக சாலை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் தலைவர் பிரபு கனிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
    • நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 15 எண்ணிக்கையிலான 1,2,5,7,10, மற்றும் 15,16, 19,22,32 ஆகிய வார்டுகளின் தெருக்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 5-வது வார்டு நகராட்சி உறுப்பினர் பால சுப்பிரமணியன் என்ற கண்ணன், இளைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • தார்சாலை அமைக்கும் பணியினை பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.1.18 கோடியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் அருள்நாரயணன், ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் லில்லிபுஷ்பம், கிளை செயலாளர்கள் அரியூர் முருகையா, பட்டக்குறிச்சி சத்தியராஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • சோழன் சிலையை கோவில் உள்புறத்தில் வைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்குலத்தோர் சமுதாய மக்களை தேவரினமாக ஒரே பெயரில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் .

    தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலையை கோவில் உட்புற வளாகத்தில் வைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தார் சாலை போடுவது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு. சரவணதேவர் தலைமை தாங்கி பேசியதாவது :-

    4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெரிய கோவில் கட்டிய மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலையை கோவில் உள்புறத்தில் வைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் செந்தில் தேவர், தஞ்சை நகர செயலாளர் ராமு தேவர், இளைஞரணி செயலாளர் சக்தி, நாகை மாவட்ட செயலாளர் பைரவர் தேவர், தஞ்சை மாவட்ட பொருளாளர் ரவீந்திர தேவர், பட்டுக்கோட்டை நகர துணை செயலாளர் சண்முகம், பேராவூரணி ஒன்றிய செயலாளர் தமிழ் தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் இளையராஜா தேவன் நன்றி கூறினார்.

    • குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மோசமாக இருந்தது.
    • கவுன்சிலர் சபானா தமிம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு பகுதியில் புதுமனை சமத்துவ நகர் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் அவசர வழிச்சாலை பல ஆண்டுகளாக பழுதாகி குண்டும் குழியுமாக இருந்தது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலைமையில் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இந்த ரோடை புதுப்பிக்க இப்பகுதியில் உள்ள மக்களும் பல்வேறு சமூகநல அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் சபானா தமிம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், உடனடியாக இந்த சாலையை புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன்படி உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமை ரா அஸ்ஸாப் கல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆலோசனைபடி சாலை போடும் பணி தொடங்கியது. சுமார் ஐந்து வருட கோரிக்கை நிறைவேறியதாக இப்பகுதியில் உள்ள மக்கள் அமைச்சருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

    ×