search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசுதேவநல்லூர்"

    • கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய கணபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்விஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி, கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முத்துக்குமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் மருத்துவ முகாம், வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் ரத்தின பிரகாஷ், வேதியப்பன், பிரியங்கா மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம், நோய் வராமல் தடுக்கும் வழிகள், வாழ்வி யல் முறைகள், உணவு பழக்கங்கள் குறித்து உரையாற்றினர்.

    முகாமில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம், சர்க்கரை பரிசோ தனை நடைபெற்றது. இயற்கை மருத்துவ சிகிச்சை களான அக்குபஞ்சர், அக்குபிரசர், நீர் சிகிச்சை, மசாஜ், யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இயக்கை உணவு, ஹெர்பல் டீ வழங்கப்பட்டது. ஏற்பாடு களை இயற்கை மருத்துவம், யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், எஸ்.தங்கப்பழம் கல்வி குழும அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
    • பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.

    சிவகிரி:

    சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார். வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சுந்தர், உள்ளார் விக்கி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர்கள் அமுதா, சுகந்தி, பணியா ளர்கள் காளியம்மாள் (மகளிர் தொண்டர் அணி), இந்திரா, சீனியம்மாள், முத்துமாரி, துரைகண்மீரால், பரமேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இலவச கண் மருத்துவ முகாமில் சுமார் 800 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.
    • கைப்பேசியினால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    வாசுதேவநல்லுார் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் வாசுதேவநல்லுார் எஸ். தங்கப்பழம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துமனை மருத்துவர் அபிநயா, விழி ஒளி ஆய்வாளர்கள் இந்திரசுந்தரி, ராமபிரியா, முகாம் மேலாளர் சேக்அப்துல்லா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 800 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.

    இதில் கண் எவ்வாறு பாதுகாப்பது , கைப்பேசியினால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கண்புரை, வயது முதிர்வு சார்ந்த கண் நோய்கள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு சிகிச்சை முறைகளை கண் மருத்துவ குழுவினர்களால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க., கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தமிழ்நாடு மாநில கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பபெறக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி, வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தென்காசி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செய லாளர் சுதா பாலசுப்பிர மணியன், சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட ம.தி.மு.க. துணைச்செயலாளர் சக்தி கோமதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் மாரிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, ஒன்றிய இணைச்செயலாளர் மணி சேகர், வாசுதேவ நல்லூர் ம.தி.மு.க. செயலா ளர் பாசறை கணேசன், தி.மு.க. செயலாளர் பாலசுப்பிர மணியன், மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு முருகன், வி.சி.க. சுரேஷ், முஸ்லீம் லீக் செய்யது சாகுல் ஹமீது, த.மு.மு.க. ஜமால், ம.தி.மு.க. மெடிக்கல் கருப்பையா, மாரியப்பன், விழி மணி, கோமதிசங்கர், முருகன், சந்திரன், ஆனந்த முருகன், சம்சுதீன், காளிராஜ், ராமநாதபுரம் முருகன், ராயகிரி சங்கையா, ம.தி.மு.க. துணைச்செயலாளர் தர்மர், தி.மு.க. மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் செல்லத்துரை, கட்ட பொம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் யோகா பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர்.
    • மாணவர் அமுதன் யோகாசனங்களை செய்து காட்டினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் எஸ்.டி. முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காளிசெல்வி வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். தொடர்ந்து மாணவர் அமுதன் யோகாசனங்களை செய்து காட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • அனைத்து சுவாமிகளுக்கும் 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வழிபாட்டு குழுவினர் கோவில்களில் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

    சிவகிரி:

    தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பழைய போலீஸ் நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள திருநீலகண்ட சுவாமி சமேத மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது.

    அபிஷேகம்

    முன்னதாக கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் போன்ற 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வழிபாட்டு குழுவினர் சரஸ்வதி, தேவி, மீனா, குழந்தை நாச்சியார் ஆகியோர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

    கோவிலில் பிரதோஷ நாயகர், சுவாமி-அம்மன் ஆகியோர் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்புற பிரகாரத்தில் பெண்கள் தேவாரப் பாடல்கள் பாடிக் கொண்டே முன்னே செல்ல சப்பரம் பின்னாலேயே வலம் வந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பயறு, பால் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.

    சிவகிரி

    இதனைப் போன்று சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கருணையானந்தா சித்தர் சுவாமிகள் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், விஸ்வநாதபேரி அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலையில் அமைந்துள்ள திரிபுர நாதேஸ்வரர் - சிவபரிபூரணி அம்மன் கோவில்,

    சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில், வாசுதேவநல்லூர் அருகே தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், ராமநாதபுரத்தில் சுயம்பு லிங்க சுவாமி கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில் போன்ற கோவில்களில் வழிபாட்டு குழுவினர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

    தொடர்ந்து வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம், பஞ்சாமிர்தம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

    • வனத்துறையினர் 2 மரநாய்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
    • அரியூர் மலையில் உடும்பு உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்கள் உள்ளன.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியூர் மலையை ஒட்டியுள்ள விவசாய பகுதியில் 2 அரிய வகை மரநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக புளியங்குடி வனத்துறை யினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த புளியங்குடி வனவர் மகேந்திரன் தலைமை யிலான வனத்துறையினர் 2 மரநாய்களையும் மீட்டு வடக்குப்புதூர் கால்நடை மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வு க்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து புளி யங்குடி வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியூர் மலையில் அரியவகை வன உயிரினங்களான எறும்புத்திண்ணி, உடும்பு, முள் எலி, முள்ளம் பன்றி, மரநாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகை யான வன உயிரினங்கள் உள்ளன. இவை அவ்வ போது மலை அடிவார பகுதியில் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருவதாக அப்பகுதி யினர் கூறுகி ன்றனர். எனவே அரியூர் மலையை பாது காக்கப்பட்ட வனப்பகுதி யாக அறிவித்து அவற்றை பாதுகாக்க உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், இயற்கை மருத்துவ தீர்வுகள் குறித்து பாரதி விளக்கி கூறினார்.
    • கோடைகால உணவு முறைகள் குறித்து மாணவி அகல்யா, கெஜின் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி உதவி முதல்வர் பாரதி முன்னிலை வகித்து, கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் குறித்து விளக்கி கூறினார். கோடைகாலத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி அகல்யா, மாணவர் கெஜின் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ, மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பணிநியமன ஆணைகளை மாணவர்கள் பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.
    • வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற வளாகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.தங்கபழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பிரபல முன்னணி நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 242 மாணவர்கள் பணிநியமன ஆணைகளை பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டிதயன் அவசியம்,வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் பணிநியமனம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் ராம்குமார் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • சிவகிரியில் அம்பேத்கர் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

    சிவகிரி:

    அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவரும், வக்கீலும், மண்டல் தலைவருமான ராம்குமார் தலைமையில் வாசுதேவ நல்லூரில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பொது செயலாளர்கள் மகாலிங்கம், தினேஷ், பொருளாளர் கங்காதரன், ராமச்சந்திரன், முருகன், சாமி, பால்ராஜ், ரவி, முத்தமிழ்செல்வம், சங்கர், பண்டாரம், செல்வ கணேசன், இசக்கி, சர வணன், தங்க ராஜ், கவியரசு, வாஜ்பாய் முரு கன், மாரி யப்பன், செல்வம், குரு சாமி, கணே சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    இதேபோல் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி மற்றும் சிவகிரி நகர காங் கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரியில் அவரது சிலைக்கு முன்பாக அலங்க ரித்து வைக்க ப்பட்டி ருந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் துணை த்தலைவர் கணேசன், நகர தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் இலக்கிய பிரிவு தலைவர் அசோக், நிர்வாகிகள் நாட்டாண்மை மாணி க்கம், சந்திரன், பிச்சை மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்ட னர். முடிவில் நகர செயலாளர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார்.

    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனி கலந்து கொண்டு வளாகத்தேர்வை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனியின் மனிதவள அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் விவேக் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

    ×